கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு உண்மையான சீக்ரெட் சான்டா கிஃப்ட் டிசம்பர் 27 அன்று கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஜனவரி 2024 இறுதியில் தனது முதல் வட்டி குறைப்பை அறிவிக்கும் எனக் கூறப்பட்டாலும் இதற்கான வாய்ப்பு 15 சதவீதம் மட்டுமே என்பது சந்தையின் கணிப்பு, இப்படியிருக்கையில் வட்டி விகிதம் குறைய அதிகப்படியான வாய்ப்பு மார்ச் 20, 2024 காலகட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக அமெரிக்கச் சந்தையில் முதலீடுகள் தொடர்ந்து வெளியேறியது மட்டும் அல்லாமல் வேகமாக வளரும் இந்திய பங்குச்சந்தையில் குவிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் என்எஸ்இ நிஃப்டி 50 புதிய வாழ்நாள் அதிகபட்சமான 21,673 புள்ளிகளையும், பிஎஸ்இ சென்செக்ஸ் 72,110 புள்ளிகளை அடைந்து வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய நிலையில், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 701.63 புள்ளிகள் உயர்ந்து 72,038.43 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டெக் மஹிந்திரா, என்டிபிசி பங்குகள் மட்டுமே சரிவுடன் உள்ளது.

அல்ட்ராடெக் சிமெண்ட் அதிகப்படியாக 4.23 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இதைத் தொடர்ந்து JSW ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, இண்டஸ்இந்த் ஆகியவை 2 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
மேலும் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 213.40 புள்ளிகள் உயர்ந்து 21,654.75 புள்ளிகளை எட்டியுள்ளது, நிஃப்டியில் துறை வாரியான குறியீடுகளில் நிஃப்டி ஆயில் அண்ட் கேஸ் 0.29 சதவீதம் சரிவில் உள்ளது.


Click it and Unblock the Notifications