வரலாற்று உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்.. 5 முக்கியக் காரணம்..!!

அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த முடிவுகள் மற்றும் உறுதியான உலகளாவிய சந்தைகளின் வளர்ச்சி மூலம் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால் மிகையில்லை.

உள்நாட்டுச் சந்தைகளில் முதலீட்டில் தடுமாற்றம் இருந்தாலும் வியாழக்கிழமை மும்பை பங்குச்சந்தையில் குவிந்த புதிய முதலீடுகள் வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் குறியீடு 62447.73 என்ற வரலாற்று உச்ச அளவை அடையும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் செய்யப்பட்டு அதிகப்படியான முதலீடு தான் வெள்ளிக்கிழமை புதிய வரலாற்று உச்சத்தை அடையக் காரணமாக இருந்தது. இந்தத் தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..?

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

30 நிறுவனங்கள் அடங்கிய S&P இன்டெக்ஸ் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 62,412.33 புள்ளிகளைத் தொட்டு, அக்டோபர் மாதம் 19ஆம் தேதியன்று எட்டிய 62,245 புள்ளிகள் சாதனை முறியடித்துப் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தடுமாற்றத்தில் இருக்கும் சென்செக்ஸ் 62447.73 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.

நிப்டி குறியீடு

நிப்டி குறியீடு

இதற்கிடையில், நிப்டி குறியீடு இன்று 2.15 சதவீதம் அதிகரித்து 18,533.15 புள்ளிகள் என்ற வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில் பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட அனைத்து பங்குகளின் சந்தை மூலதனம் ரூ.283.9 லட்சம் கோடியை எட்டியதால் மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு ரூ.2.46 லட்சம் கோடி அதிகரித்தன.

ரீடைல் முதலீட்டாளர்கள்

ரீடைல் முதலீட்டாளர்கள்

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் வரலாற்று உச்சத்தைத் தொட்டாலும் ரீடைல் முதலீட்டாளர்கள் நேற்றைய உச்சத்தைப் பணமாக்க முடிவு செய்து பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சென்செக்ஸ் குறியீடு 58.26 புள்ளிகள் சரிந்து 62,211.76 புள்ளிகளாக உள்ளது. இதேபோல் நிஃப்டி 8.55 புள்ளிகள் சரிந்து 18,475.55 புள்ளிகளை எட்டியுள்ளது.

மத்திய வங்கி விகித உயர்வுகளில் மந்தநிலை

மத்திய வங்கி விகித உயர்வுகளில் மந்தநிலை

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் சமீபத்திய கூட்டத்தின் முடிவில் பெஞ்ச்மார்க் விகிதத்தை முன்பு போல் வேமாக உயர்த்தாமல் குறைவான வேகத்தில் தான் உயர்த்தும், இதேபோல் எவ்வளவு உயர்த்தும் என்பதைக் கணிக்க முடியவில்லை எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை

பெரும்பாலான ஆசிய சந்தைகள் வளர்ச்சி பாதையில் இருக்கும் காரணத்தால் இந்திய சந்தைக்குச் சாதகமாக மாறியுள்ளது. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-வின் நிலைப்பாடு பெரும்பாலான சந்தைகளுக்குச் சாதகமாக அமைந்தது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்தது

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

தொடர்ந்து சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலை முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ரஷ்ய கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட உள்ள விலை, மற்றும் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது முக்கியமான காரணமாகும்.

இந்திய ரூபாய்

இந்திய ரூபாய்

முதலீட்டு சந்தை சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் காரணத்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களில் 81,84 ரூபாயில் இருந்து 81.54 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் சமீபத்திய கூட்டத்தின் முடிவில் பெஞ்ச்மார்க் விகிதத்தை முன்பு போல் வேமாக உயர்த்தாமல் குறைவான வேகத்தில் தான் உயர்த்துவது தான் காரணம்.

வெள்ளிக்கிழமை வர்த்தகம்

வெள்ளிக்கிழமை வர்த்தகம்

வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தடுமாற்றத்தில் இருக்கும் சென்செக்ஸ் 62447.73 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் செய்யப்பட்டு அதிகப்படியான முதலீடு தான் வெள்ளிக்கிழமை புதிய வரலாற்று உச்சத்தை அடைய காரணமாக இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+