எங்கே செல்லும் இந்த பாதை... தடுமாற்றத்தில் பங்கு சந்தைகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று சென்செக்ஸ் 28,288 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது சென்செக்ஸ். இது கடந்த 3 வருடங்களில் இல்லாத மிகப் பெரிய சரிவு எனச் சொல்லி இருந்தோம்.

ஆனால் அதை எல்லாம் சென்செக்ஸ் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மீண்டும் இன்று சரிவிலேயே வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது சென்செக்ஸ்.

இன்று காலை 28,460 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ், இன்றைய குறைந்தபட்ச புள்ளியாக 27,932 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது.

தற்போது சென்செக்ஸ்

தற்போது சென்செக்ஸ்

மார்ச் 19, 2020, வியாழக் கிழமை அன்று சென்செக்ஸ் 28,288 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 28,460 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 28,388 புள்ளிகளைத் தொட்டு சுமார் 100 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

தற்போது நிஃப்டி

தற்போது நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி நேற்று, 8,263 புள்ளிகளில் நிறைவடைந்து இருந்தது. இன்று காலை 8,248 புள்ளிகளில் வர்த்தகமாகத்தொடங்கி, தற்போது சுமாராக 8,333 புள்ளிகளைத் தொட்டு 69 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்ச புள்ளியாக 8,178 புள்ளிகளைத் தொட்டு இருப்பது, நிஃப்டியில் தடுமாற்றத்தைக் காட்டுகிறது.

உலக பங்குச் சந்தைகள்
 

உலக பங்குச் சந்தைகள்

நேற்று மார்ச் 19, 2020, அமெரிக்காவின் நாஸ்டாக் 2.30 % ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல லண்டனின் எஃப் டி எஸ் இ 1.40 %, பிரான்ஸின் சி ஏ சி 2.68 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 2.00 % ஏற்றம் கண்டு இருக்கின்றன. இப்படியே நிலைத்து நின்று ஏற்றம் காணத் தொடங்கினால் மிக நன்றாக இருக்கும். நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

இன்று மார்ச் 20, 2020, ஆசியாவில் பெரும்பாலான சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தைவானின் தைவான் வெயிடெட் 5.84 % ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. குறைந்தபட்சமாக இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 1.72 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

30 பங்குகள்

30 பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,763 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 949 பங்குகள் ஏற்றத்திலும், 736 பங்குகள் இறக்கத்திலும், 78 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

கெயில், ஐடிசி, ஓ என் ஜி சி, ஜி எண்டர்டெயின்மெண்ட், டெக் மஹிந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இண்டஸ் ஈண்ட் பேங்க், யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ஈஷர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex is trading with more volatility

The Bombay stock exchange sensex 30 index is trading with more volatility. The nifty also facing heavy volatility.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X