சென்செக்ஸ் 1700 புள்ளிகள் உயர்வு.. முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்..!

இந்திய பங்குச்சந்தையில் தேர்தல் முடிவுக்கு பின்பு மிகவும் மோசமான வர்த்தகத்தை பதிவு செய்தாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர் உயர்வை பதிவு செய்துள்ளது.

இன்றைய (வெள்ளிக்கிழமை) வர்த்தகத்தில் மாபெரும் உயர்வு காணப்பட்டது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் அதே 6.5 சதவீதத்தை அறிவித்த பின்பு, 2025 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.2 சதவீதம் வரையில் உயரும் என ஆர்பிஐ அறிவிப்பு முதலீட்டாளர் மத்தியில் புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

சென்செக்ஸ் 1700 புள்ளிகள் உயர்வு.. முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்..!

அதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 5.54 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து 421.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவைத் தொடர்ந்து, வட்டி விகிதங்களால் பாதிக்கப்படும் துறைகளான வங்கி, நிதி, வாகனத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளின் பங்குகள் 8% வரை உயர்ந்தன.

அதாவது, Sunteck Realty மற்றும் Siba நிறுவனங்களின் பங்குகள் 8% வரை உயர்ந்தன, அதேபோல் பிரபல ரியல்எஸ்டேட் நிறுவனமான Brigade, Lodha மற்றும் Mahindra Lifespace நிறுவனங்களின் பங்குகள் 2-5% வரை உயர்ந்தன.

நிஃப்டியில் வங்கி பங்குகளும் 3% வரை உயர்ந்தன, குறிப்பாக பந்தன் வங்கி, பெடரல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கிகளின் பங்குகள் 1-3.5% வரை உயர்வு கண்டது.

இன்று பங்குச்சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது ஐ.டி மற்றும் வங்கி துறை பங்குகள் தான். பிஜேபி கூட்டணியில் ஆட்சி அமைக்கப்படுகிறது என்பது உறுதியான நாளில் இருந்து ஐ.டி மற்றும் வங்கி துறை பங்குகள் முதலீட்டாளர்களின் முக்கிய டார்கெட் ஆக மாறியது.

டெக் பங்குகள் பிரிவில் இன்று அதிக உயர்வைப் பெற்றன. விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 5% க்கும் அதிகமாகவும், இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 3% க்கும் அதிகமாகவும் உயர்ந்தன. அதேபோல், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக் நிறுவனங்களின் பங்குகள் தலா 2-3% வரை உயர்ந்தன.

இதை தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகம் லாபம் ஈட்டிய பிற நிறுவனங்கள் பட்டியலில் Bajaj Finance, Ultratech Cement மற்றும் Tata Steel ஆகியவை இருந்தன. இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்தில் அதிக பங்களிப்பு செய்த நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது. சென்செக்ஸ் குறியீட்டில் இதன் பங்குகள் 192 புள்ளிகள் உயர்வுக்கு உதவி செய்தது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதங்களை மாற்றாமல் அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவும், மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபசிலிடி (MSF) விகிதம் 6.75 சதவீதமாகவும், ஸ்டாண்டிங் டெபாசிட் ஃபசிலிடி (SDF) விகிதம் 6.25 சதவீதமாகத் தொடர்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது உரையில், நாட்டின் உயரும் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ளார். 2024-25 நிதிய ஆண்டிற்கான உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

ஆர்பிஐ முன்பு 2025 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டதிலிருந்து 7.2 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என தனது மதிப்பீட்டை உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

மேலும், காலாண்டு வாரியான மதிப்பீடுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜூன் காலாண்டு - 7.3 சதவீதம் (முன்னர் 7.1%)
செப்டம்பர் காலாண்டு - 7.2 சதவீதம் (முன்னர் 6.9%)
டிசம்பர் காலாண்டு - 7.3 சதவீதம் (முன்னர் 7.0%)
மார்ச் காலாண்டு - 7.2 சதவீதம் (முன்னர் 7.0%)

இதேவேளையில் ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவில் கவர்னர் சக்திகாந்த தாஸ் 2024-25 நிதி ஆண்டிற்கான பணவீக்க கணிப்பை ரிசர்வ் வங்கி மாற்றமின்றி 4.5 சதவீதமாகவே வைத்துள்ளது. காலாண்டு வாரியான கணிப்புகளும் முன்னர் போலவே 4.9%, 3.8%, 4.6%, 4.5% ஆகவே உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+