அதானி விவகாரத்தால் பெரும் சரிவை நேற்று இந்திய பங்குச் சந்தை சந்தித்தாக கூறப்பட்ட நிலையில், இன்று அதானி பங்குகளோடு ஒட்டுமொத்த மும்பை பங்குச்சந்தையும் தடாலடியாக உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் சிறிய அளவிலான உயர்வுடன் துவங்கினாலும் 3 மணியளவில் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, நிஃப்டி 50 கிட்டத்தட்ட 600 புள்ளிகள் உயர்ந்து 23,934 புள்ளிகளை எட்டியுளளது. இது ஐந்து மாதங்களில் இல்லாத உயர்வு என்பதால் முதலீட்டாளர்கள் துள்ளி குதித்து ஓடி வருகின்றனர்.
இன்றைய அதிரடி உயர்வால் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மொத்த சந்தை மூலதனம் சுமார் 7.2 லட்சம் கோடி அதிகரித்து ரூ.432.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முக்கியமாக அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் 2 சதவீத உயர்வில் இருந்தாலும், லஞ்ச வழக்கில் சிக்கியிருக்கும் அதானி கிரீன், அதானி எனர்ஜி ஆகியவை அதிகளவிலான சரிவை தொடர்ந்து சந்தித்து வருகிறது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1961.32 புள்ளிகள் உயர்ந்து 79,117.11 புள்ளிகளை எட்டியுள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 557.35 புள்ளிகள் உயர்ந்து 23,907.25 புள்ளிகளை எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 30க்கு 30 நிறுவனமும் உயர்வுடன் உள்ளது. குறிப்பாக எஸ்பிஐ, டைட்டன், டிசிஎஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி, ஹெச்சிஎல், இன்போசிஸ், பவர்கிரிட், JSW ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ், எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, மஹிந்திரா, என்டிபிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்சர்வ் ஆகியவை 2 சதவீதம் முதல் 4.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், FMCG, ஐடி, மெட்டல், சுகாதாரம் மற்றும் எண்ணெய் & வாயு துறைகளின் பங்குகளும் 1-2% வரை உயர்ந்தன.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஐடி பங்குகளின் ஏற்றம் குறிப்பிடத்தக்கது. நிஃப்டி ஐடி குறியீடு கிட்டத்தட்ட 2% உயர்ந்துள்ளது. இது அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையின் வலுவான தரவுகளால் இன்று ஐடி சேவை துறையில் அதிகப்படியான மூதலீடுகள் குவிந்துள்ளது. அக்டோபர் மாதம் மந்தநிலைக்குப் பிறகு, நவம்பரில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சமீபத்திய விலை வீழ்ச்சியை பயன்படுத்தி தரமான பங்குகளை குறைந்த விலையில் வாங்க முற்பட்டதால் இந்த ஏற்றம் ஏற்பட்டது. நிஃப்டி குறியீடு அதன் சமீபத்திய உச்சத்தில் இருந்து 11% க்கும் மேலாக சரிந்தது. மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளும் சுமார் 12% மற்றும் 9% முறையே சரிந்தன. இந்த சரிவை பயன்படுத்திக்கொள்ள இன்று பணத்தை பங்குச்சந்தையில் கொட்டியுள்ளனர்.
இதேவேளையில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் பிஜேபி தலைமையிலான ஆட்சி அமையும் என எக்சிட் போல் கணிப்புகள் வெளியான நிலையில், இதுவும் இன்றைய உயர்வுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications