வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 501.73 புள்ளிகளை இழந்து 58,909.35 புள்ளிகளை எட்டியுள்ளது. சென்செக்ஸ் தனது பென்ச்மார்க் அளவான 60000 புள்ளிகளை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 59,411.08 புள்ளிகளில் வர்த்தகத்தை துவங்கி 58,866.26 புள்ளிகள் வரையில் சரிந்தது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மாருதி சுசூகி, ஆக்சிஸ் வங்கி ஆகிய இரண்டும் 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது.
டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, பவர் கிரிட், ஹெச்சிஎல் டெக், எல் அண்ட் டி, அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகியவை மட்டுமே உயர்வுடன் உள்ளது.
நிஃப்டி குறியீடு
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 129 புள்ளிகளை இழந்து 17,321.90 புள்ளிகளை எட்டியுள்ளது. சென்செக்ஸ் போலவே நிஃப்டி குறியீடும் தனது பென்ச்மார்க் அளவான 17800 புள்ளிகளை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது. நிஃப்டியில் இன்று லார்ஜ் கேப், ஸ்மால் கேப், மிட் கேப் என அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது.
ஐடி துறை சரிவு
மேலும் நிஃப்டி சந்தையில் துறை வாரியான குறியீட்டில் ரியல் எஸ்டேட் 2 சதவீதமும், ஆயில் & கேஸ் 0.03 சதவீதம் மட்டும் உயர்ந்துள்ளது. ஐடி துறை குறியீடு இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 1.26 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
வியாழக்கிழமை மாலை வர்த்தகம் முடியும் நேரத்திஸ் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா சரிந்து 82.60 ரூபாயாக உள்ளது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் 4 அதானி குழும பங்குகள் அப்பர் சர்கியூட் அளவீட்டை எட்டியது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை காரணமாக ஒரு நாள் லீவுக்கு பின்பு மும்பை பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவுடன் துவங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து 8 நாள் சரிந்து வந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் அதானி பங்குகள் மீதான புதிய முதலீடுகள் காரணமாகவும், உள்நாட்டு சந்தை முதலீடுகள் காரணமாக உயர்ந்தது.
சென்செக்ஸ் சரிவு
இந்த நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனை காரணமாக சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணவீக்கம் அச்சம்
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றத்திற்கு முக்கியமான காரணம் உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி வருவதால் மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தும் என கணிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக இந்தியாவில் எல் நினோ கால நிலை நாட்டின் விவசாய துறை உற்பத்தியை பாதித்து உணவு பணவீக்கம் அதிகரிக்கும் அச்சம் உருவாகியுள்ளது.
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம்
இதனால் அடுத்த ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது. இதனாலேயே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் பங்கு முதலீட்டுகளை வெளியேற்ற முக்கிய காரணமாக உள்ளது. இதோடு அதானி குழுமத்தை சூழ்ந்துள்ள பிரச்சனைகளும் முதலீட்டாளர் மனநிலை மாறியதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications