அமெரிக்காவின் பெஞ்ச்மார்க் 10 ஆண்டு பத்திர முதலீட்டில் கிடைக்கும் லார அளவுகள் கடந்த வாரம் 29 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.29 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மூலம் இது மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய வாராந்திர வீழ்ச்சியை பதிவு செய்து ஆசிய சந்தைக்கு இன்றைய வர்த்தகம் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
அமெரிக்க பத்திர முதலீட்டின் லாப அளவுகள் குறைய முக்கியமான காரணம் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவு, ஊதிய பாதிப்புகள் தணிந்தது, அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை உயர்த்துவதையும், குறைப்பதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஆகியவையும் அடங்கும்.

இதேநேரத்தில் ரஷ்யா ஒரு நாளுக்கு 3 லட்சம் பேரல்களும், சவுதி அரேபியாவின் 10 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பை டிசம்பர் மாதம் வரையில் நீட்டிக்க உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வது மட்டும் அல்லாமல் அமெரிக்காவின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே ஆசிய சந்தையில் உயர்வை பதிவு செய்யப்பட்ட நிலையில் நிஃப்டி குறியீடு இன்று அதன் முந்தைய முடிவான 19,230.60 புள்ளிகளுக்கு எதிராக 19,345.85 இல் துவங்கி, அதிகபட்சமாக 19,423 புள்ளிகளை தொட்டு வர்த்தக முடிவில் நிஃப்டி 181 புள்ளிகள் அதிகரித்து 19,411.75 இல் முடிவடைந்தது.
இதேபோல் சென்செக்ஸ் குறியீடு அதன் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவான 64,363.78 புள்ளிகளுக்கு எதிராக 64,835.23 புள்ளிகளில் துவங்கி அதிகபட்சமாக 64,992.54 புள்ளிகளை தொட்டு வர்த்தர முடிவில் சென்செக்ஸ் 594.91 புள்ளிகள் அதிகரித்து 64,958.69 புள்ளிகளில் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ (0.65 சதவீதம் சரிவு), டைட்டன் (0.32 சதவீதம் சரிவு), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (0.29 சதவீதம் சரிவு) மற்றும் டாடா மோட்டார்ஸ் (0.29 சதவீதம் சரிவு) ஆகிய நான்கு பங்குகள் மட்டுமே டாப் 30 நிறுவனங்கள் பட்டியிலில் சரிந்துள்ளது.
மிட் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் வலுவான லாபத்தைக் கண்டு நிலையில் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.90 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவீதமும் உயர்ந்தது.
மேலும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பீடு 315.2 லட்சம் கோடி ரூபாயில் இருவ்து சுமார் 318.2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்ததுள்ளது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஒரே நாளில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் டிஎல்எப், ஓஎன்ஜிசி, பவர் கிரிட், ஸ்ரீராம் பைனான்ஸ் மற்றும் சேமோட்டோ உட்பட 250 க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் இன்று புதிய 52 வார உச்சத்தை எட்டின. இதற்கிடையில், கச்சா எண்ணெய் விலைகள் ஏறக்குறைய 2 சதவீதம் உயர்ந்தன.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications