இந்திய பங்கு சந்தையானது இன்று ரிசர்வ் வங்கியின் அதிரடி முடிவுக்கு மத்தியில் மீண்டும் ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே அதானி குழும பங்குகளின் மோசமான சரிவுக்கு மத்தியில் பங்கு சந்தையானது பலமான ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆர்பிஐ ரெப்போ விகிதத்தினை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.50% ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் தான் பங்கு சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. அதோடு அதானி குழும பங்குகள் பலவும் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. இதுவும் ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது..
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கலாம்
இதுமட்டும் அல்ல. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது சாதகமான வளர்ச்சியினை எட்டலாம் என கூறியுள்ளது. அத்தோடு நில்லாமல் ஜிடிபி குறித்தான கணிப்பினையும் உயர்த்தியுள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் பெடரல் ரிசர்வ் வங்கி இனி வட்டி அதிகரிப்பினை செய்யாது என்றவாறு கருத்தினையும் கூறியுள்ளது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கியும் பொருளாதாரம் நேர்மறையாக சென்று கொண்டுள்ளது என்றதொரு நேர்மறையான கருத்தினை தெரிவித்துள்ளது.
எதிர்பார்ப்பு
இதற்கிடையில் 2023 - 24ல் ஜிடிபி விகிதமானது 6.4% ஆக இருக்கலாம் என்றும், சிபிஐ பணவீக்க விகிதமானது 5.3% ஆகவும் கணித்துள்ளது. இது தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இலக்கிற்குள் உள்ளது எனலாம். ஆக இனி வரும் கூட்டத்திலும் வட்டி விகிதம் என்பது பெரியளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை நிலவரம்
சென்செக்ஸ் 378 புள்ளிகள் அல்லது 0.63% அதிகரித்து, 60,663.79 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 17,871.70 புள்ளிகளாக, 150 புள்ளிகள் அல்லது 0.85% ஆக அதிகரித்து முடிவடைந்துள்ளது.
இதில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் நல்ல ஏற்றத்தில் முடிவடைந்தன.இதில் பிஎஸ்இ மிட்கேப், பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடுகள் ஏற்றத்திலேயே முடிவடைந்தன.
எவ்வளவு அதிகரிப்பு?
பிஎஸ்இ சந்தையில் பட்டியலிடப்பட்ட 268.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த அமர்வில் 266 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் 2.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலையானது மூன்றாவது நாளாக உச்சத்திலேயே காணப்படுகின்றது. இதில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 85 டாலர்களாக உச்சம் எட்டியுள்ளது.
இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பானது 20 பைசா அதிகரித்து, 82.49 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
நிப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப், பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் உள்ளது. இதே பவர் கிரிட் கார்ப், கோல் இந்தியா, லார்சன், ஹீரோ மோட்டோகார்ப், ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் இருந்தது.
சென்செக்ஸ் குறியீடு?
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் உள்ளது. இதே லார்சன், பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா, ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் இருந்தது.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications