உலக நாடுகளின் வட்டி விகித உயர்வுகள், பொருளாதார மந்தநிலை மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றால் தொடர்ந்து நீடித்து வரும் கவலைகள் முதலீட்டாளர்கள் தங்களது பங்கு முதலீடுகளை தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலை உலகம் முழுவதும் இருக்கும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தை இன்றுடன் சுமார் ஆறு நாட்களாக தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வருகிறது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவுடன் முடிவடைந்துள்ளது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கணிசமாக உயர்ந்த வேளையிலும் இந்திய பங்குச்சந்தை ஆதாயங்களைக் கண்டாலும் உள்நாட்டு பங்குகள் சரிந்தன. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை பல நாட்களுக்கு முன்பு அறிவித்தாலும் சர்வதேச சந்தையின் தாக்கம் மற்றும் சூழ்நிலைக்கு மத்தியில் இந்திய சந்தை பங்குகள் அதிகளவிலான சரிவை பதிவு செய்து வருகிறது. முக்கியமாக நிஃப்டி தனது முக்கிய சப்போர்ட் அளவான 17800 புள்ளிகளை இழந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 142 புள்ளிகள் அல்லது 0.24 சதவீதம் குறைந்து 59,463.93 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 45 புள்ளிகள் அல்லது 0.26 சதவீதம் குறைந்து 17,465.80 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. இதோடு மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சரிவுடன் முடிந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம்
இன்றைய வர்த்தகத்தில் அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், பயோகான், இமாமி, கோத்ரெஜ் பிராபர்டீஸ் மற்றும் இப்கா லேபரட்டரீஸ் உள்ளிட்ட 224 பங்குகள் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டின் இன்ட்ராடே வர்த்தகத்தில் 52 வார குறைவான விலையை எட்டியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது இதற்கு முக்கியமான காரணம் மார்ச் மாதத்தில் இருந்து ரஷ்யா தனது கச்சா எண்ணெய் உறப்த்தியை குறைக்க உள்ள காரணத்தால் சந்தை வரும் கச்சா எண்ணெய் அளவு குறையும். இதனால் சப்ளை டிமாண்ட் பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை உயர துவங்கியுள்ளது.
விலைவாசி உயர்வு
ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் வேளையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு தக்காளி விலை முதல் விமான டிக்கெட் விலை வரையில் அதிகரிக்கும்.
எண்ணெய் இருப்பு
இதேபோல் அமெரிக்க அதிகரித்து வரும் எண்ணெய் இருப்பு அளவில் பாதிப்பு உருவாகியுள்ளது, மேலும் OPEC நாடுகள் இதுவரையில் யாரும் கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தியை செய்வதாக அறிவிக்கவில்லை, இதனால் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதனால் பென்ச்மார்க் வட்டி விகிதம் தொடர்ந்து உயர வாய்ப்புகள் உள்ளது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய்
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 83 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது, இன்றைய வர்த்தகத்தில் மட்டும் கிட்டதட்ட 1 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. தொடர்ந்து நான்காவது வாரமாக டாலர் மதிப்பு உயர்வு பாதையில் இருந்தாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.75 ஆக உள்ளது.
நிஃப்டி குறியீடு
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டில் ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் அதிகப்படியான உயர்வை எட்டியுள்ளது. இதேபோல் அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா அதிகப்படியான சரிவை எட்டியுள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications