ரெப்போ விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ.. 1300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று எல்ஐசியின் பங்கு வெளியீடு தொடங்கியுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் சில்லறை முதலீட்டாளர்களின் ஆர்வம் மிக அதிகம் எனலாம்.
இன்று தொடங்கியுள்ள பங்கு விற்பனையானது மே 9ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இத்துடன் பங்கு விற்பனையில், பாலிசிதாரர்காள், ஊழியர்கள், சில்லறை முதலீட்டாளர்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.
May 04, 2022, 3:55 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1306.96 புள்ளிகள் சரிந்து 55,669.03 புள்ளிகளை அடைந்துள்ளது
May 04, 2022, 3:55 pm IST
நிஃப்டி குறியீடு 391.50 புள்ளிகள் சரிந்து 16,677.60 புள்ளிகளை அடைந்துள்ளது
May 04, 2022, 3:55 pm IST
சற்றும் எதிர்பார்க்காத வகையில் வட்டி உயர்வை அறிவித்த ஆர்பிஐ
May 04, 2022, 3:55 pm IST
அமெரிக்க பெடரல் ரிசர்வ் அறிவிப்புக்கு முன்பு ஆர்பிஐ வட்டியை உயர்த்தியதால் அன்னிய முதலீடுகள் வெளியேறுவதைத் தடுக்க முடியும்
May 04, 2022, 3:55 pm IST
அதானி கிரீன் மார்ச் காலாண்டில் 15 சதவீத உயர்வில் 121 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது
May 04, 2022, 3:55 pm IST
கோட்டாக் மஹிந்திரா வங்கி மார்ச் காலாண்டில் 2767.4 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது
May 04, 2022, 2:30 pm IST
ரெப்போ உயர்வால் வீட்டுக் கடன், வாகனக் கடன் தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்திற்குமான வட்டி உயரும்
May 04, 2022, 2:28 pm IST
வட்டி விகித உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு சரிவு
May 04, 2022, 2:28 pm IST
வட்டி விகிதம் உயர்வால் பணப்புழக்கத்தில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது - ஆர்பிஐ கவர்னர்
May 04, 2022, 2:28 pm IST
வங்கிகளுக்கு வட்டி உயர்வுக்கு பின்பும் அதிகப்படியான உபரி நிதி மற்றும் பணப்புழக்கம் இருக்கும் - ஆர்பிஐ கவர்னர்
May 04, 2022, 2:28 pm IST
சிஆர்ஆர் விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.50% உயர்வு - ஆர்பிஐ
May 04, 2022, 2:28 pm IST
சிஆர்ஆர் விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதன் மூலம் 4.5 சதவீதமாக உயர்வு - ஆர்பிஐ
May 04, 2022, 2:28 pm IST
ரெப்போ விகிதம், சிஆர்ஆர் விகித உயர்வின் மூலம் பணவீக்கம் குறையும் - ஆர்பிஐ
May 04, 2022, 2:26 pm IST
ரெப்போ விகிதம் 4.40% ஆக உயர்வதன் மூலம் வங்கி கடன் வட்டி விகிதம் உயரும்
May 04, 2022, 2:25 pm IST
ரெப்போ விகிதம் 4.40% ஆக உயர்வதன் கடனுக்கான ஈஎம்ஐ அதிகம்
May 04, 2022, 2:25 pm IST
உணவு பொருட்கள் பணவீக்கம் தொடரும்
May 04, 2022, 2:25 pm IST
கச்சா எண்ணெய் விலை பணவீக்கத்தில் அதிகப்படியான சுமையை உருவாக்கியுள்ளது
May 04, 2022, 2:24 pm IST
எப்ரல் மாதமும் சில்லறை பணவீக்கம் அதிகமாக தான் இருக்கும் - ஆர்பிஐ கவர்னர்
May 04, 2022, 2:24 pm IST
புதிய ரெப்போ விகிதம் 4.40% - ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு
May 04, 2022, 2:24 pm IST
பருவ மழை சிறப்பாக இருக்கும் காரணத்தால் விவசாய துறையின் உற்பத்தி அதிகரிக்கும் - ஆர்பிஐ கவர்னர்
May 04, 2022, 2:24 pm IST
விவசாய துறையின் உற்பத்தி அதிகரிப்பால் ஊரக வளர்ச்சி சிறப்பாக இருக்கும் - ஆர்பிஐ கவர்னர்
May 04, 2022, 2:23 pm IST
எஸ்டிஎப் விகிதம் 4.15 சதவீதமாக மாற்றம்
May 04, 2022, 2:23 pm IST
எம்எஸ்எப் விகிதம் 4.65 சதவீதமாக மாற்றம்
May 04, 2022, 2:21 pm IST
ஆர்பிஐ வட்டியை உயர்த்த முடிவு - சக்திகாந்த தாஸ்
May 04, 2022, 2:21 pm IST
40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படும் - சக்திகாந்த தாஸ்
May 04, 2022, 2:20 pm IST
நாணய கொள்கை கூட்டம் ஒருமனதாக முடிவு - சக்திகாந்த தாஸ்
May 04, 2022, 2:20 pm IST
புதிய வட்டி விகிதம் உடனடியாக அமலாக்கம் - சக்திகாந்த தாஸ்
May 04, 2022, 2:20 pm IST
போர் பாதிப்பு, சர்வதேசச் சந்தை பாதிப்புகள் மூலம் இந்தியாவும் பாதிக்கப்பட்டு உள்ளது - சக்திகாந்த தாஸ்
May 04, 2022, 2:19 pm IST
இந்தியா அதிகப்படியான சவால்களைச் சந்தித்தாலும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது - சக்திகாந்த தாஸ்
May 04, 2022, 2:09 pm IST
உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவு பாதையில் உள்ளது - சக்திகாந்த தாஸ்
May 04, 2022, 2:09 pm IST
அதிகப்படியான அன்னிய முதலீடு வெளியேறி வருகிறது - சக்திகாந்த தாஸ்
May 04, 2022, 2:09 pm IST
ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்ட மாற்றம் புதிய சவால்களை உருவாக்கியது - சக்திகாந்த தாஸ்
May 04, 2022, 2:04 pm IST
ரிசர்வ் வங்கி கவர்னர் பணவீக்கம் குறித்து அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
May 04, 2022, 2:04 pm IST
ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை அறிவிக்கலாம்
May 04, 2022, 2:03 pm IST
ரிசர்வ் வங்கி புதிய டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிடலாம்
May 04, 2022, 2:02 pm IST
ரிசர்வ் வங்கி திடீர் கூட்டத்தின் அறிவிப்பால் பங்குச்சந்தை பத்திர சந்தை சரிவு
May 04, 2022, 2:02 pm IST
எல்ஐசி ஐபிஓ-வில் 40 சதவீத பங்குகளுக்கு முதலீடு குவிந்தது
May 04, 2022, 2:02 pm IST
எல்ஐசி பாலிசிதாரர்கள் பங்குகளுக்கு1.4 மடங்கு அதிக முதலீடு குவிந்துள்ளது
May 04, 2022, 1:17 pm IST
ஆர்பிஐ அறிவிப்பால் சென்செக்ஸ் சரிவு
May 04, 2022, 1:16 pm IST
இந்தியன் ஹோட்டல்ஸ் பங்குகள் 3 சதவீதம் சரிவு
May 04, 2022, 1:16 pm IST
எல்ஐசி ஐபிஓ 34 சதவீத பங்குகளுக்கு முதலீடு குவிந்தது
May 04, 2022, 12:11 pm IST
இன்று அமெரிக்காவின் இரு நாள் நாணய கொள்கை கூட்டம் துவக்கம்
May 04, 2022, 12:11 pm IST
குஜராத்-ல் 120 மெகாவாட் சோலார் திட்டத்தை துவங்கும் டாடா பவர்
May 04, 2022, 12:11 pm IST
எல்ஐசி 12 மணி அளவில் 27 சதவீத பங்குகளுக்கு முதலீட்டை பெற்றது
May 04, 2022, 12:07 pm IST
எல்ஐசி நிறுவனத்தின் பங்கு வெளியீடு இன்று தொடக்கம்!
May 04, 2022, 12:06 pm IST
எல்ஐசி ஐபிஓ மதிப்பு..!
May 04, 2022, 11:08 am IST
எல்ஐசி ஐபிஓ: 30 நிமிடத்தில் அசத்தல்.. அலைமோதும் முதலீட்டாளர்கள்
May 04, 2022, 11:08 am IST
10 மணிக்கு துவங்கிய எல்ஐசி ஐபிஓ 30 நிமிடத்தில் 4% பங்குகள் ஐபிஓ குவிந்துள்ளது
May 04, 2022, 11:08 am IST
எல்ஐசி ஊழியர்கள் கோட்டாவில் 10% பங்குகள்
May 04, 2022, 11:08 am IST
ரீடைல் முதலீட்டாளர்களுக்கான கோட்டாவில் 8% பங்குகள்
May 04, 2022, 11:08 am IST
HNI முதலீட்டாளர்களுக்கான கோட்டாவில் 2 சதவீதம் பங்குகளுக்கு முதலீடு குவிந்தது
May 04, 2022, 11:06 am IST
16,20,78,067 எல்ஐசி பங்குகளுக்கு 70,61,970 பங்குகள் முதலீடு குவிந்தது
May 04, 2022, 10:57 am IST
எல்ஐசி ஐபிஓ மதிப்பு ரூ.21,000 கோடி, முன்னதாக ரூ.65000 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
May 04, 2022, 10:56 am IST
தற்போது வரையில் இந்தியாவில் மிகபெரிய ஐபிஓ- ஆக எல்ஐசி உள்ளது.
May 04, 2022, 10:37 am IST
எல்ஐசி ஐபிஓ-வில் 15 பங்குகள் ஒரு லாட் ஆக நிர்ணயம்
May 04, 2022, 10:37 am IST
ஒரு லாட்டுக்கு மேலாக 15ன் மடங்கில் வாங்கி வைக்கலாம்
May 04, 2022, 10:37 am IST
தள்ளுபடிகள் தவிர்த்து ரூ.14,235 ஒரு லாட்டுக்கு செலுத்த வேண்டியிருக்கும்
May 04, 2022, 10:31 am IST
எல்ஐசி-யில் பங்கு வெளீயீட்டில் பாலிதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.60 தள்ளுபடி
May 04, 2022, 10:31 am IST
சில்லறை முதலீட்டாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரு பங்குக்கு ரூ.45 தள்ளுபடி அறிவிப்பு
May 04, 2022, 10:23 am IST
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எல்ஐசி ஐபிஓ இன்று தொடக்கம்
May 04, 2022, 10:23 am IST
மே 4 தொடங்கி- மே 9 அன்று பங்கு வெளியீடு முடிவடையவுள்ளது
May 04, 2022, 10:23 am IST
எல்ஐசி ஐபிஓ-வில் பங்கு விலை ரூ.902 - 945 ஆக நிர்ணயம்
May 04, 2022, 9:45 am IST
சென்செக்ஸ் குறியீடு 9.42 மணிக்கு 50 புள்ளிகள் சரிவில் 56,626.07 புள்ளிகளை எட்டியுள்ளது
May 04, 2022, 9:45 am IST
ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்
May 04, 2022, 9:45 am IST
ப்ரீ ஓப்பனிங் மார்கெட்டில் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்
May 04, 2022, 9:44 am IST
எல்ஐசி நிறுவனத்தின் 21000 கோடி ரூபாய் ஐபிஓ இன்று துவக்கம்
May 04, 2022, 9:44 am IST
சீனா பொருளாதார மந்த நிலையால் உலக நாடுகள் அச்சம்
May 04, 2022, 9:44 am IST
சீனா பொருளாதார வளர்ச்சி சரியும் நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
May 04, 2022, 9:44 am IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 106 டாலருக்கு கீழ் சரிவு
Share This Article
English summary
sensex nifty live today 2022 April 04: lic ipo listing titan tata steel britannia brent crude bitcoin gold rate vix
sensex nifty live today 2022 April 04: lic ipo listing titan tata steel britannia brent crude bitcoin gold rate vix ஆரம்பமே தடுமாற்றம்.. ஆனா உயர்வில் சென்செக்ஸ்..!
Story first published: Wednesday, May 4, 2022, 15:56 [IST]