சென்செக்ஸ் 388 புள்ளிகள் சரிவு.. ரிலையன்ஸ், ஐடி பங்குகள் சரிவு..!
ரஷ்யா - உக்ரைன் போர் பாதிப்புகள், அதிகரித்து வரும் பத்திர முதலீட்டு லாப அளவீடுகள், சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று, XE வேரியன்ட் வைரஸ் பரவல், இன்று மாலை வெளியாக உள்ள அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் ஆகியவை இன்று பங்குச்சந்தை முதலீட்டை அதிகளவில் பாதித்து வருகிறது.
மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதை நேற்று டிசிஎஸ் துவக்கிவைத்த நிலையில், இனி அடுத்தடுத்து அனைத்து முன்னணி நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது.
இந்தக் காலாண்டு முடிவுகளில் விலைவாசி உயர்வால் ஒவ்வொரு நிறுவனமும் எந்த அளவிற்குப் பாதித்துள்ளது என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க உள்ளதால், முதலீட்டாளர் மிகவும் கவனமுடன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் வாயிலாக 2வது நாளாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 530 புள்ளிகள் சரிந்துள்ளது.
Apr 12, 2022, 4:13 pm IST
சென்செக்ஸ் குறியீடு 388.20 புள்ளிகள் சரிந்து 58,576.37 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 12, 2022, 4:13 pm IST
நிஃப்டி குறியீடு 144.65 புள்ளிகள் சரிந்து 17,530.30 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 12, 2022, 4:12 pm IST
கச்சா எண்ணெய் விலை குறைவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இனி இருக்காது
Apr 12, 2022, 4:12 pm IST
இந்திய பங்குகள் அதிக மதிப்பீட்டில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது - கிரெடிட் சுசூசி சுரேஷ் தானியா
Apr 12, 2022, 4:12 pm IST
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பணவீக்கம் கடுமையாகப் பாதிக்கும் - கிரெடிட் சுசூசி சுரேஷ் தானியா
Apr 12, 2022, 4:11 pm IST
இந்தியன் ஆயில் ரஷ்ய கச்சா எண்ணெய் ஆர்டர் செய்யவில்லை
Apr 12, 2022, 4:11 pm IST
தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீடுகளை ஆய்வு செய்ய செபி புதிய விதிமுறையை அறிமுகம் செய்ய உள்ளது
Apr 12, 2022, 4:11 pm IST
Adda52-வின் தாய் நிறுவனமான டெல்டா டெக் ஐபிஓ வெளியிட செபி அமைப்பிடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது
Apr 12, 2022, 4:09 pm IST
மாருதி ரோஹ்தக் R&D மையத்தில் தீ விபத்து
Apr 12, 2022, 1:42 pm IST
சென்செக்ஸ் குறியீடு 547.4 புள்ளிகள் சரிந்து 58,417.17 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 12, 2022, 1:42 pm IST
நிஃப்டி குறியீடு 201.00 புள்ளிகள் சரிந்து 17,473.95 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 12, 2022, 1:42 pm IST
எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் 3.57 சதவீத பங்குகளை விற்றார் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
Apr 12, 2022, 1:41 pm IST
இந்தியா VIX குறியீடு 1 சதவீதம் குறைந்தது
Apr 12, 2022, 1:41 pm IST
Gufic Biosciences பங்குகள் 14 சதவீதம் அதிகரித்து 52 வார உயர்வைத் தொட்டது
Apr 12, 2022, 1:41 pm IST
அமெரிக்க பணவீக்க தரவுகள் வெளியாகும் காரணத்தால் தங்கம் விலை உயர்வு
Apr 12, 2022, 1:41 pm IST
கிரீன் எனர்ஜி துறையில் புதிய ஆற்றல் தளத்தை கண்டுப்பிடிக்க ஒடிஷா அரசுடன் பாரத் பெட்ரோலியம் கார்ப் ஒப்பந்தம்
Apr 12, 2022, 1:41 pm IST
அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 5.55 சதவீதம் உயர்வு
Apr 12, 2022, 1:41 pm IST
ரைட்ஸ் பங்குகள் 5.57 சதவீதம் உயர்வு
Apr 12, 2022, 1:40 pm IST
கொச்சின் ஷிப்யார்டு பங்குகள் 5.12 சதவீதம் உயர்வு
Apr 12, 2022, 1:40 pm IST
டாடா மோட்ட்டார்ஸ் குளோபல் குரூப் விற்பனை 2 சதவீதம் உயர்ந்து 3,34,884 கார்களை விற்பனை செய்துள்ளது
Apr 12, 2022, 1:39 pm IST
டெலிகாம் பங்குகள் சரிவு
Apr 12, 2022, 11:08 am IST
சென்செக்ஸ் குறியீடு 477.79 புள்ளிகள் சரிந்து 58,486.78 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 12, 2022, 11:08 am IST
நிஃப்டி குறியீடு 166.15 புள்ளிகள் சரிந்து 17,508.80 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 12, 2022, 11:08 am IST
சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 58,338.13 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது
Apr 12, 2022, 11:08 am IST
SPML இன்பரா நிறுவனம் 712 கோடி ரூபாய் திட்டத்தை கைப்பற்றியது
Apr 12, 2022, 11:07 am IST
SPML இன்பரா பங்குகள் 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்கியூட் அளவீட்டைத் தொட்டு உள்ளது
Apr 12, 2022, 11:07 am IST
நிஃப்டி மெட்டல் குறியீடு 3 சதவீதம் வரையில் சரிவு
Apr 12, 2022, 11:07 am IST
JSW ஸ்டீல் ஒடிசாவில் 65000 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்டீல் தொழிற்சாலையை அமைக்கச் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது
Apr 12, 2022, 11:07 am IST
டெல்டா கார்ப் பங்குகள் 4 சதவீதம் வரையில் சரிவு
Apr 12, 2022, 11:07 am IST
ஆஸ்திரேலியாவில் இன்போசிஸ் Living Lab Ecosystem அறிமுகம் செய்துள்ளது
Apr 12, 2022, 11:07 am IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஹெச்சிஎல், டிசிஎஸ், மாருதி சுசூகி, கோட்டாக் வங்கி, நெஸ்லே ஆகியவை மட்டுமே உயர்வுடன் உள்ளது
Apr 12, 2022, 10:51 am IST
சரிவில் துவங்கிய டிசிஎஸ் பங்குகள் உயர்வு
Apr 12, 2022, 10:51 am IST
டிசிஎஸ் கைப்பற்றிய திட்டங்களின் எண்ணிக்கை, மதிப்பில்ல மகிழ்ச்சி- டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன்
Apr 12, 2022, 10:51 am IST
டிசிஎஸ் ஊழியர்களுக்கான செலவுகள் கண்காணிப்பு - டிசிஎஸ் சிஓஓ கணபதி சுப்பிரமணியம்
Apr 12, 2022, 10:50 am IST
கச்சா எண்ணெய் விலை 2 மாத சரிவை எட்டியுள்ளது
Apr 12, 2022, 10:50 am IST
100 டாலர் அருகில் பிரென்ட் கச்சா எண்ணெய்,
Apr 12, 2022, 10:50 am IST
கச்சா எண்ணெய் விலை குறைப்பால் விலைவாசி விரைவில் குறைய வாய்ப்பு
Apr 12, 2022, 10:50 am IST
பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் எவ்விதமான மாற்றமும் இல்லை
Share This Article
English summary
sensex nifty live today 2022 April 12: tcs q4 results, US inflation data China covid cases brent crude oil price bitcoin gold rate earnings season
sensex nifty live today 2022 April 12: tcs q4 results, US inflation data China covid cases brent crude oil price bitcoin gold rate earnings season 2வது நாளாகச் சரியும் சென்செக்ஸ்.. அதானி கிரீன் 9% உயர்வு..!
Story first published: Tuesday, April 12, 2022, 16:13 [IST]