சென்செக்ஸ் குறியீடு 537.22 புள்ளிகள் சரிவு.. பஜாஜ் டிவின்ஸ் பங்குகள் சரிவு..!
சர்வதேச மந்த நிலை வர்த்தகத்தாலும், அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வரும் காரணத்தாலும், குறிப்பாக மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவன பட்டியலில் இருக்கும் இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் கடுமையான வரி உயர்வு திட்டம், சீனாவின் லாக்டவுன் கட்டுப்பாடுகள், உக்ரைன் போர் மூலம் ஐரோப்பாவில் உருவாகியுள்ள மந்த நிலை ஆகியவை முதலீட்டுச் சந்தையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் உயர்வுடன் முடிவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு இன்று பெரும் சரிவுடன் உள்ளது.
Apr 27, 2022, 4:28 pm IST
சென்செக்ஸ் குறியீடு 537.22 புள்ளிகள் சரிந்து 56,819.39 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 27, 2022, 4:28 pm IST
நிஃப்டி குறியீடு 162.40 புள்ளிகள் சரிந்து 17,038.40 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 27, 2022, 12:54 pm IST
எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ மே 4ஆம் தேதி துவங்கும் - எல்ஐசி அறிவிப்பு
Apr 27, 2022, 12:54 pm IST
மே 2ஆம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கும், மே 4 ஆம் தேதி பிற முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்படும் - எல்ஐசி அறிவிப்பு
Apr 27, 2022, 12:54 pm IST
எல்ஐசி ஐபிஓ மே 9 ஆம் தேதி முடிவடையும் - எல்ஐசி அறிவிப்பு
Apr 27, 2022, 12:53 pm IST
எல்ஐசி ஐபிஓ-வில் பங்குகளின் விலை ரூ.902-949 - எல்ஐசி அறிவிப்பு
Apr 27, 2022, 12:53 pm IST
எல்ஐசி ஐபிஓ-வில் ஒரு லாட்-க்கு 15 பங்குகள் - எல்ஐசி அறிவிப்பு
Apr 27, 2022, 12:53 pm IST
எல்ஐசி ஐபிஓ அளவு 21,257 கோடி ரூபாய் - எல்ஐசி அறிவிப்பு
Apr 27, 2022, 12:53 pm IST
எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு 6.07 லட்சம் கோடி ரூபாய் - எல்ஐசி அறிவிப்பு
Apr 27, 2022, 12:53 pm IST
எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடி - எல்ஐசி அறிவிப்பு
Apr 27, 2022, 12:52 pm IST
எல்ஐசி ஊழியர்களுக்கும், ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் ரூ.45 தள்ளுபடி - எல்ஐசி அறிவிப்பு
Apr 27, 2022, 12:52 pm IST
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிட உள்ளது எல்ஐசி - எல்ஐசி அறிவிப்பு
Apr 27, 2022, 12:52 pm IST
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் 3.5% பங்குகளை விற்பனை செய்ய உள்ளது - எல்ஐசி அறிவிப்பு
Apr 27, 2022, 12:32 pm IST
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஏப்ரல் 27 அன்று மதியம் 12.30 மணிக்கு வரவிருக்கும் IPO குறித்துச் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளது.
Apr 27, 2022, 12:31 pm IST
அரசு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ மே 2 ஆம் தேதி வெளியாகும் எனத் தற்போது வெளியாகியுள்ள தரவுகள் அடிப்படையில் தெரிகிறது
Apr 27, 2022, 12:31 pm IST
மே 2ஆம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கும், மே 4 ஆம் தேதி பிற முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Apr 27, 2022, 12:31 pm IST
எல்ஐசி ஐபிஓ மே 9 ஆம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
Apr 27, 2022, 12:31 pm IST
எல்ஐசி ஐபிஓ-வில் பங்குகள் ரூ.902-949 என்ற விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Apr 27, 2022, 12:31 pm IST
எல்ஐசி பாலிசிதாரர்களுக்குச் சுமார் ரூ.60 தள்ளுபடி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது
Apr 27, 2022, 12:31 pm IST
எல்ஐசி ஊழியர்களுக்கும், ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் சுமார் ரூ.45 தள்ளுபடி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது
Apr 27, 2022, 12:30 pm IST
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாகக் குழு சனிக்கிழமையன்று 3.5% பங்குகளைச் சுமார் 210 பில்லியன் ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது
Apr 27, 2022, 12:30 pm IST
உலகின் 8வது பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் விளங்குகிறது
Apr 27, 2022, 12:30 pm IST
2021ஆம் ஆண்டில் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் 507.33 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது
Apr 27, 2022, 12:17 pm IST
சென்செக்ஸ் குறியீடு 486.4 புள்ளிகள் சரிந்து 56,870.21 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 27, 2022, 12:17 pm IST
நிஃப்டி குறியீடு 165.50 புள்ளிகள் சரிந்து 17,035.30 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 27, 2022, 12:16 pm IST
UBL நிறுவனத்தின் வருமானம் 10.7 சதவீதம் உயர்வு
Apr 27, 2022, 12:16 pm IST
விப்ரோ SAP பிரிவில் இயங்கும் Rizing நிறுவனத்தை 540 மில்லியன் டாலருக்கு கைப்பற்றுகிறது
Apr 27, 2022, 12:16 pm IST
டாடா மோட்டார்ஸ் 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள 5450 எலக்ட்ரிக் பஸ்-களை கைப்பற்றியுள்ளது
Apr 27, 2022, 12:16 pm IST
புதிய கிராவிட்டி எனர்ஜி சேமிப்பு தொழில்நுட்பத்திற்காக NTPC சுவிஸ் நிறுவனமான எனர்ஜி வால்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது
Apr 27, 2022, 12:16 pm IST
இலங்கைக்கு கடன் உதவி செய்ய உலக வங்கி ஒப்புதல்
Apr 27, 2022, 12:15 pm IST
உலக வங்கி அறிவிப்புக்குப் பின்பு இலங்கை பங்குச்சந்தையில் முதலீடு குவிய துவங்கியது
Apr 27, 2022, 12:15 pm IST
ஏப்ரல் 5ஆம் தேதிக்கு பின் இலங்கை பங்குச்சந்தை 5% வரை உயர்வு
Apr 27, 2022, 12:15 pm IST
பியூச்சர் குரூப் பங்குகள் தொடர்ந்து சரிவு; ரீடைல் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு
Apr 27, 2022, 12:15 pm IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2815.70 ரூபாய் வரையில் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது
Apr 27, 2022, 12:15 pm IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மொத்த சந்தை மதிப்பு ரூ.19 லட்சம் கோடியாக உயர்வு
Apr 27, 2022, 12:14 pm IST
ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் ஐபிஓ துவங்கி முதல் 30 நிமிடத்தில் 10% பங்குகளுக்கு முதலீடு குவிந்தது
Apr 27, 2022, 12:14 pm IST
அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு வரும் ஐடி துறை பங்குகள்
Apr 27, 2022, 12:14 pm IST
Yabao பார்மா நிறுவனத்துடன் லூபின் ஒப்பந்தம்; சீன வர்த்தக சந்தைக்குள் நுழைய திட்டம்
Apr 27, 2022, 11:37 am IST
ஸ்ரீதிக்விஜய் சிமெண்ட் நிறுவனம் 4வது காலாண்டு லாபம் 53.3% சரிந்து 12.9 கோடி ரூபாயாக உள்ளது
Apr 27, 2022, 11:36 am IST
எல்ஐசி நிறுவனம் 902-949 ரூபாய் விலையில் ஐபிஓ வெளியிட உள்ளது
Apr 27, 2022, 11:36 am IST
ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர்-ன் ரூ.1600 கோடி ஐபிஓ இன்று துவங்கியது
Apr 27, 2022, 11:35 am IST
குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள், குறைந்த அளவிலான மார்ஜின்- பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் அதிகப்படியாக விற்பனை
Apr 27, 2022, 11:35 am IST
சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரையில் சரிவு
Apr 27, 2022, 11:35 am IST
அமெரிக்காவின் 10 ஆண்டு முதலீட்டு பத்திரத்தின் லாபம் 2.77 சதவீதம் வரையில் உயர்வு
Apr 27, 2022, 11:35 am IST
மார்ச் காலாண்டுகளை வெளியிட்ட ஆல்பபெட் பங்குகள் 4 சதவீதம் சரிவு
Apr 27, 2022, 11:34 am IST
காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள மெட்டா நிறுவன பங்குகள் 4 சதவீதம் சரிவு
Share This Article
English summary
sensex nifty live today 2022 April 27: hindustan unilever hul bajaj auto rainbow childrens medicare ipo crude bitcoin gold rate
sensex nifty live today 2022 April 27: Hindustan unilever hul bajaj auto rainbow childrens medicare ipo crude bitcoin gold rate ரீடைல் முதலீட்டாளர்களை ஏமாற்றிய மும்பை பங்குச்சந்தை.. 430 புள்ளிகள் சரிவு..!
Story first published: Wednesday, April 27, 2022, 16:28 [IST]