தொடர் உயர்வில் சென்சென்ஸ்.. இன்போசிஸ் பங்குகள் 3.76% உயர்வு..!
மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகத்தில் ஆசியச் சந்தையில் ஏற்பட்ட சரிவைச் சமாளித்து உயர்வுடன் துவங்கியுள்ளது. ஆனால் சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கம், நாணய மதிப்பைச் சரி செய்ய வட்டி உயர்வை முக்கியமான கருவியாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த வாரம் பல நாடுகளில் மத்திய வங்கி நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ள நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் உஷாராக முதலீடு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகம் அதிகப்படியான தடுமாற்றத்துடன் துவங்கினாலும் 250 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது.
Mar 14, 2022, 4:01 pm IST
சென்செக்ஸ் குறியீடு 935.72 புள்ளிகள் உயர்ந்து 56,486.02 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 14, 2022, 4:01 pm IST
நிஃபடி குறியீடு 240.85 புள்ளிகள் உயர்ந்து 16,871.30 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 14, 2022, 4:01 pm IST
இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் துறை அதிகப்படியான சரிவை பதிவு செய்தது
Mar 14, 2022, 4:00 pm IST
பிரிட்டன் பவுண்ட் மதிப்பு 16 மாத சரிவை தொட்டு உள்ளது
Mar 14, 2022, 4:00 pm IST
சீன நிறுவனங்களுக்குத் தரவுகளைப் பகிர்ந்துள்ளது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்
Mar 14, 2022, 3:57 pm IST
பாரத்பே நிறுவனம் 20 லட்சம் ரூபாய் வரையில் தனது merchant partners-க்கு தங்கக் கடன் அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
Mar 14, 2022, 3:56 pm IST
டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே பாரத்பே தங்கக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது 20 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது
Mar 14, 2022, 3:56 pm IST
ஹெச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ வங்கி பங்குகள் 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வு
Mar 14, 2022, 3:56 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 4 நிறுவனங்கள் சரிவு
Mar 14, 2022, 3:56 pm IST
டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி, சன்பார்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் சரிவு
Mar 14, 2022, 3:11 pm IST
சென்செக்ஸ் குறியீடு 947.72 புள்ளிகள் உயர்ந்து 56,498.02 புள்ளிகளை எட்டியது
Mar 14, 2022, 3:11 pm IST
நிஃப்டி குறியீடு 245.20 புள்ளிகள் உயர்ந்து 16,875.65 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 14, 2022, 3:11 pm IST
2021ஆம் நிதியாண்டில் வங்கி மோசடிகள் 11582 கோடி ரூபாய், 2017ஆம் நிதியாண்டில் இதன் அளவு 61,229 கோடி ரூபாய்
Mar 14, 2022, 3:11 pm IST
2022ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் 648 கோடி ரூபாய் அளவிலான கடன் மோசடிகள் மட்டுமே பதிவாகியுள்ளது
Mar 14, 2022, 3:10 pm IST
MFI கடனை பெற குடும்ப வருமானம் அளவீடு 2 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சமாக அதிகரிப்பு
Mar 14, 2022, 3:10 pm IST
என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாள் சிறை - சிபிஐ
Mar 14, 2022, 3:10 pm IST
சீனாவின் Jilin பகுதியில் கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் Phenol உற்பத்தி செய்யும் தீபக் நைச்ரைட் பங்குகள் 6.11 சதவீதம் உயர்வு
Mar 14, 2022, 3:10 pm IST
ஜல் ஜீவன் மிஷன் கீழ் சுமார் 2,120 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை பவர் மெக் ப்ராஜெக்ட் கைப்பற்றியுள்ளது
Mar 14, 2022, 3:09 pm IST
சிப்லா பங்குகள் இன்று 52 வார உயர்வை தொட்டு உள்ளது
Mar 14, 2022, 1:26 pm IST
சென்செக்ஸ் குறியீடு 601.96 புள்ளிகள் உயர்ந்து 56,152.26 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 14, 2022, 1:26 pm IST
நிஃப்டி குறியீடு 139.00 புள்ளிகள் உயர்ந்து 16,769.45 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 14, 2022, 1:26 pm IST
நிஃப்டி மீடியா குறியீடு 2.1 சதவீதம் வரையில் உயர்வு
Mar 14, 2022, 1:26 pm IST
நிஃப்டி வங்கி குறியீடு 1.7 சதவீதம் வரையில் உயர்வு
Mar 14, 2022, 1:26 pm IST
நிஃப்டி வங்கி குறியீடுகள் அனைத்தும் உயர்வுடன் உள்ளது
Mar 14, 2022, 1:26 pm IST
பிப்ரவரி மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 13.11 சதவீதமாக உயர்வு
Mar 14, 2022, 1:26 pm IST
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 2023ஆம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக சரியும் என நோமுரா கணித்துள்ளது
Mar 14, 2022, 1:25 pm IST
நைகா பிராண்டின் தாய் நிறுவனமான FSN ஈகாமர்ஸ் நிறுவனத்திற்கு 1620 ரூபாய் டார்கெட் விலையை கொடுத்துள்ளது சிட்டி குரூப்
Mar 14, 2022, 1:25 pm IST
நைகா பங்குகள் 20 சதவீதம் வரையில் உயரும் என சிட்டி குரூப் கணித்துள்ளது
Mar 14, 2022, 1:25 pm IST
BHEL தனது 42வது நியூக்லியர் ஸ்டீம் ஜெனரேட்டர்-ஐ NPCIL நிறுவனத்திற்கு அளித்துள்ளது.
Mar 14, 2022, 1:25 pm IST
சென்னையில் 10 லட்சம் சதுரடியில் StanChart GBS நிறுவனத்திற்கு அலுவலக கட்டிடத்தை கட்ட 550 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்கிறது
Mar 14, 2022, 12:04 pm IST
ஆட்டோமொபைல் பங்குகள் 1 சதவீதம் வரையில் சரிவு
Mar 14, 2022, 12:04 pm IST
ரூச்சி சோயா பொது சந்தையில் 4300 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட பங்குகளை விற்பனை செய்கிறது
Mar 14, 2022, 12:04 pm IST
ரூச்சி சோயா பங்குகள் 12 சதவீதம் வரையில் உயர்ந்து 900 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது
Mar 14, 2022, 12:04 pm IST
எலான் மஸ்க் தனது பிட்காயின், எதிரியம், டோஜ்காயினை விற்பனை செய்யப்போவது இல்லை என டிவிட் செய்த பின்பு பிட்காயின் விலை உயர்வு
Mar 14, 2022, 12:03 pm IST
சென்செக்ஸ் குறியீடு 471.46 புள்ளிகளை உயர்ந்து 56,021.76 புள்ளிகளை எட்டியது
Mar 14, 2022, 12:03 pm IST
நிஃப்டி குறியீடு 103.20 புள்ளிகள் உயர்ந்து 16,733.65 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 14, 2022, 12:03 pm IST
பேடிஎம் பங்குகள் மீண்டும் 700 ரூபாய் அளவீட்டை தொட்டது
Mar 14, 2022, 12:02 pm IST
பேடிஎம் ஐபிஓ விலையை விடவும் 67.4 சதவீதம் சரிவில் உள்ளது
Mar 14, 2022, 12:02 pm IST
Omaxe பில்டர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
Mar 14, 2022, 12:02 pm IST
கச்சா எண்ணெய் விலை மெல்ல மெல்ல சரிவு
Mar 14, 2022, 12:02 pm IST
WTI கச்சா எண்ணெய் விலை 2.52 சதவீதம் சரிந்து 106.6 டாலராக உள்ளது
Mar 14, 2022, 12:02 pm IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.12 சதவீதம் சரிந்து 110.3 டாலராக உள்ளது
Mar 14, 2022, 12:00 pm IST
நெஸ்லே நிறுவனம் மேகி விலையை 9-16 சதவீதம் உயர்த்தியது
Mar 14, 2022, 12:00 pm IST
ஜூப்லியன்ட் புட்ஸ் சிஇஓ வெளியேற்றத்தின் மூலம் இந்நிறுவனத்தின் டார்கெட் விலையில் 39 சதவீதம் சரிவு
Mar 14, 2022, 11:59 am IST
கிரிஸ்னா டயக்னாசிஸ் சிஓஓ சிவானந்த்தா ராவ் ராஜினாமா
Mar 14, 2022, 10:30 am IST
ரிசர்வ் வங்கி HDFC வங்கி மீது இருந்த அனைத்து தடை, கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது
Mar 14, 2022, 10:30 am IST
HDFC வங்கியின் 2.0 திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது
Mar 14, 2022, 10:30 am IST
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 0.4 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் 1977.1 ஆக உள்ளது
Mar 14, 2022, 10:30 am IST
Paytm பேமெண்ட்ஸ் பேங்க்: புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதித்த ஆர்பிஐ..!
Mar 14, 2022, 10:28 am IST
ஜூம்லியன்ட் புட்வொர்க்ஸ் சிஇஓ பிபதிக் போட்டா ராஜினாமா செய்த காரணத்தால் இந்நிறுவன பங்குகள் 10 சதவீதம் வரையில் சரிவு
Mar 14, 2022, 10:28 am IST
சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான shenzhen-ல் கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது
Mar 14, 2022, 10:28 am IST
சீனாவில் சுமார் 18 மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது
Mar 14, 2022, 10:26 am IST
சீனா shenzhen-ல் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் குறைந்தது ஒரு வாரமாவது நடைமுறையில் இருக்கும்
Mar 14, 2022, 10:25 am IST
சீனாவில் கொரோனா தொற்று தொடர்ந்து 4வது நாளாக அதிகரித்து வருகிறது
Mar 14, 2022, 10:23 am IST
சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து வருகிறது
Mar 14, 2022, 10:20 am IST
ரஷ்யா - உக்ரைன் இன்று பேச்சுவாரத்தை நடத்துவதால் தங்கம், வெள்ளி விலை சரிவு
Mar 14, 2022, 10:19 am IST
பேடிஎம் பங்குகள் புதிய 52 வார சரிவை தொட்டது
Mar 14, 2022, 10:19 am IST
பேடிஎம் பங்குகள் 13.3 சதவீதம் சரிந்து 672.1 ரூபாயாக குறைந்தது
Share This Article
English summary
sensex nifty live today 2022 March 14:russia ukraine war nuclear tension inflation fed rate hike lic ipo crude oil gold price bitcoin rate
sensex nifty live today 2022 March 14 தடுமாறும் சென்செக்ஸ்.. தாறுமாறாக உயரும் இன்போசிஸ் பங்குகள்..!
Story first published: Monday, March 14, 2022, 16:02 [IST]