1041 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. அசத்தும் டைட்டன் பங்குகள்..!
சீனாவின் முக்கிய வர்த்தகப் பகுதியான ஷாங்காய்-யில் கொரோனா தட்டுப்பாடுகள் தளர்வு, அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி உயர்வில் ஏற்பட்ட தொய்வு ஆகியவை இன்று ஆசிய சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
May 30, 2022, 4:16 pm IST
திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1041.08 புள்ளிகள் உயர்ந்து 55,925.74 புள்ளிகளை அடைந்துள்ளது
May 30, 2022, 4:16 pm IST
நிஃப்டி குறியீடு 308.95 புள்ளிகள் உயர்ந்து 16,661.40 புள்ளிகளை அடைந்துள்ளது
May 30, 2022, 4:16 pm IST
கிரிப்டோ ஆலோசனை அறிக்கை தயார் - பொருளாதார விவகாரத்துகை செயலாளர் அஜய் சேத்
May 30, 2022, 4:15 pm IST
டிக்சான் டெக் மார்ச் காலாண்டில் 36 சதவீத உயர்வில் 63 சதவீத உயர்வு
May 30, 2022, 2:53 pm IST
இந்தியா VIX குறியீடு 5 சதவீதம் சரிந்து 20 க்கு குறைந்துள்ளது
May 30, 2022, 2:53 pm IST
சீனாவின் லாக்டவுன் தளர்வு ஐரோப்பிய பங்குகள் சரிவு
May 30, 2022, 2:53 pm IST
பிஎஸ்ஈ ரியாலிட்டி குறியீடு 3.5 சதவீதம் உயர்வு
May 30, 2022, 2:53 pm IST
B2B பேமெண்ட்ஸ் சேவை நிறுவனமான ப்ளேமேட் 1500 கோடி ரூபாய்க்கு ஐபிஓ விண்ணப்பத்தை செபியிடம் சமர்ப்பித்துள்ளது
May 30, 2022, 1:03 pm IST
2500 கோடி ரூபாய் மதிப்புள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கைப்பற்றியது L&T
May 30, 2022, 1:03 pm IST
L&T பங்குகள் விலை 3.12 சதவீதம் உயர்ந்து 1650.30 ரூபாயாக உள்ளது
May 30, 2022, 1:02 pm IST
ஐடி பங்குகள் இன்று அதிகப்படியான உயர்வு
May 30, 2022, 1:02 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1015.49 புள்ளிகள் உயர்ந்து 55,900.15 புள்ளிகளை எட்டியுள்ளது
May 30, 2022, 1:02 pm IST
நிஃப்டி குறியீடு 290.40 புள்ளிகள் உயர்ந்து 16,642.85 புள்ளிகளை எட்டியுள்ளது
May 30, 2022, 1:02 pm IST
கோபோர்ஜ், Persistent Systems நிறுவன பங்குகள் 6 சதவீதத்திற்கு மேல் சரிவு
May 30, 2022, 1:02 pm IST
52 வார உயர்வை தொட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள்
May 30, 2022, 1:02 pm IST
காலாண்டு முடிவுகளுக்கு பின்பு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் இன்று 5 சதவீதம் அதிகரித்து 1,006.7 ரூபாயாக உள்ளது
May 30, 2022, 1:01 pm IST
சுத்தகரிப்பு அளவீட்டை 100 MMTPA ஆக உயர்த்த ONGC திட்டம்
May 30, 2022, 1:00 pm IST
அசோக் லேலாண்ட் பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிவு
May 30, 2022, 11:43 am IST
சென்செக்ஸ் குறியீடு 1126.3 புள்ளிகள் உயர்ந்து 56,010.96 புள்ளிகளை எட்டியுள்ளது
May 30, 2022, 11:43 am IST
நிஃப்டி குறியீடு 319.50 புள்ளிகள் உயர்ந்து 16,671.95 புள்ளிகளை எட்டியுள்ளது
May 30, 2022, 11:43 am IST
1100 புள்ளிகள் உயர்வுக்கு முக்கிய காரணம் :
அமெரிக்க பங்குச்சந்தை உயர்வு
அமெரிக்க பணவீக்க கவலைகள் குறைந்தது
லாக்டவுனில் இருந்து சீனா மீண்டும் வர்த்தகத்திற்குத் திரும்புகிறது
முக்கிய நிறுவன பங்குகள் அதிகப்படியான முதலீடு
ரூபாய் மதிப்பு உயர்வு
நிறுவனங்களின் மதிப்பீட்டு மறுசீரமைப்பு
May 30, 2022, 11:43 am IST
பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு 4.4 லட்சம் கோடி ரூபாய் உயர்வு
May 30, 2022, 11:43 am IST
மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பீடு ரூ.253.13 லட்சம் கோடியில் இருந்து 257.51 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு
May 30, 2022, 11:42 am IST
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் குறியீடு 2% மேல் உயர்வு
May 30, 2022, 11:42 am IST
ஸ்ரீராம் ப்ராபெர்டீஸ் நிறுவன பங்குகள் 13 சதவீதம் வரையில் உயர்வு
May 30, 2022, 11:42 am IST
ஸ்ரீராம் ப்ராபெர்டீஸ் நிறுவனம் மார்ச் காலாண்டில் 64.4 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது
May 30, 2022, 11:42 am IST
டாடா மோட்டார்ஸ் பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
May 30, 2022, 11:41 am IST
ரூபாய் மதிப்பு 12 பைசா உயர்ந்து 77.46 ஆக உயர்வு
May 30, 2022, 11:41 am IST
சோமேட்டோ, இன்போசிஸ் பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
May 30, 2022, 11:41 am IST
7 வார சரிவுக்கு பின்பு அமெரிக்க சந்தை உயர்வு
May 30, 2022, 11:40 am IST
தென் கொரியா, ஜப்பான், இந்தியா, சீனா பங்குச்சந்தைகள் உயர்வு
May 30, 2022, 11:40 am IST
11 வார உயர்வில் கச்சா எண்ணெய் விலை
May 30, 2022, 11:40 am IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 119 டாலரை தாண்டியது
Share This Article
English summary
sensex nifty live updates 30 may 2022: ongc share price mahindra irctc ethos ipo listing covid brent crude bitcoin gold rate
sensex nifty live updates 30 may 2022: ongc share price mahindra irctc ethos ipo listing covid brent crude bitcoin gold rate 1100 புள்ளிகள் உயர்வு.. 56000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்..!
Story first published: Monday, May 30, 2022, 16:16 [IST]