தட்டுத்தடுமாறி லாபத்தில் முடிந்த சென்செக்ஸ்.. மஹிந்திரா, ரிலையன்ஸ் பங்குகள் உயர்வு..!
மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 3 நாள் தொடர்ந்து உயர்வுடன் இருந்த காரணத்தால் மகிழ்ச்சியுடன் இன்று வர்த்தகம் செய்ய வந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து சரிவுடன் இருக்கும் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரையில் சரிந்து அதிர்ச்சி கொடுத்தது.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட 1 டாலர் உயர்வும் ஆசிய பங்குச்சந்தையைச் சரிவுக்குத் தள்ளியது. இதன் வாயிலாக இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி ரூபாய் மதிப்பை புதிய வரலாற்றுச் சரிவுக்குத் தள்ளி உள்ளது.
நிஃப்டி-யில் டைட்டன் பங்குகள் அதிகப்படியான சரிவை எட்டியுள்ளது, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் 3 சதவீதமும், சோமேட்டோ மீண்டும் 6 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளது.
Jun 28, 2022, 4:01 pm IST
சென்செக்ஸ் குறியீடு வெறும் 16.17 புள்ளிகள் உயர்ந்து 53,177.45 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 28, 2022, 4:00 pm IST
நிஃப்டி குறியீடு 18.15 புள்ளிகள் உயர்ந்து 15,850.20 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 28, 2022, 4:00 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்கள் உயர்வு
Jun 28, 2022, 4:00 pm IST
ஐரோப்பிய சந்தையின் Stoxx 600 குறியீடு 0.7 சதவீதம் உயர்வு
Jun 28, 2022, 4:00 pm IST
மாஸ்டர்செப் விகாஸ் கண்ணா NFT துறைக்குள் நுழைகிறார்
Jun 28, 2022, 4:00 pm IST
டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகனங்களின் விலையை 1.5 - 2.5 சதவீதம் வரை உயர்த்த திட்டம்
Jun 28, 2022, 4:00 pm IST
வொயிட் குட்ஸ் பிரிவின் PLI திட்டத்திற்கு கூடுதலாக 15 நிறுவனங்கள் தேர்வு
Jun 28, 2022, 3:58 pm IST
ONGC பங்குகள் 6 சதவீதம் வரை உயர்வு
Jun 28, 2022, 3:58 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.81 ரூபாய் வரையில் சரிவு
Jun 28, 2022, 3:58 pm IST
டிவிஎஸ் மோட்டார் பங்குகள் 2 சதவீதம் வரை உயர்வு
Jun 28, 2022, 1:47 pm IST
ONGC பங்கு மீது முதலீட்டாளர்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்
Jun 28, 2022, 1:47 pm IST
பிரான்ஸ் நாட்டில் இன்ஜினியரிங் டிசைன் சென்டரை துவங்கியது L&T டெக்னாலஜி சர்வீசஸ்
Jun 28, 2022, 1:47 pm IST
2 நாளில் சோமேட்டோ பங்குகள் 13 சதவீதம் சரிவு
Jun 28, 2022, 1:47 pm IST
97.9 லட்சம் NTPC பங்குகள் பிளாக் டீல் வாயிலாக கைமாறியது
Jun 28, 2022, 1:47 pm IST
சென்னையில் புதிய வீட்டு கட்டுமான திட்டத்தை அறிவித்துள்ள BRIGADE எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 6 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Jun 28, 2022, 1:46 pm IST
ஐடிசி நிறுவனம் புதிகாக தினை வகை உணவு பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது
Jun 28, 2022, 1:46 pm IST
அதானி பவர் பங்குகள் 274 ரூபாய் அளவீட்டை தாண்டியது
Jun 28, 2022, 1:46 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.70 ஆக சரிவு
Jun 28, 2022, 11:27 am IST
மோசமான வர்த்தகத்திலும் ஆட்டோமொபைல் பங்குகள் உயர்வு
Jun 28, 2022, 11:27 am IST
மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் 2.93 சதவீதம் உயர்வு
Jun 28, 2022, 11:26 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.5963 வரை சரிந்து வரலாற்று சரிவை எட்டியுள்ளது
Jun 28, 2022, 11:26 am IST
அமெரிக்காவின் Wockhardt நிறுவனத்தின் ஒப்புதல் பெற்ற ஜெனரிக் மருந்துகளை கிளென்மார்க் பார்மா கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது
Jun 28, 2022, 11:26 am IST
இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடு வாங்குபவர்களுக்கு ரூ.6.46 கோடிக்கு மேலான உள்ளீட்டு வரிக் கடன் சலுகைகளை வழங்கவில்லை என தேசிய லாப எதிர்ப்பு ஆணையம் (NAA) கண்டறிந்துள்ளது.
Jun 28, 2022, 11:26 am IST
கச்சா எண்ணெய் சரிவால் ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு
Jun 28, 2022, 11:25 am IST
சோமேட்டோ பங்குகள் 2வது நாளாக 6 சதவீதத்திற்கு கீழ் சரிந்துள்ளது
Jun 28, 2022, 11:25 am IST
சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது
Jun 28, 2022, 11:24 am IST
ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் தலைவர் பலோன்ஜி மிஸ்திரி 93 வயதில் மறைந்தார்
Jun 28, 2022, 11:24 am IST
பிஐ இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.13 சதவீதம் சரிவு
Jun 28, 2022, 11:24 am IST
இன்று இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பி.வி. நரசிம்ம ராவ் பிறந்த நாள்
Jun 28, 2022, 11:24 am IST
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலான் மஸ்க்-க்கு பிறந்த நாள்
Share This Article
English summary
Sensex nifty live updates today 28 june 2022 : oil price russia ukraine crisis sgx nifty futures wall street
Sensex nifty live updates today 28 june 2022 : oil price russia ukraine crisis sgx nifty futures wall street 3 நாள் கூடத் தாக்குப் பிடிக்காத மும்பை பங்குச்சந்தை.. 333 புள்ளிகள் சரிவு..!
Story first published: Tuesday, June 28, 2022, 16:02 [IST]