சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் தலா 2% உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. 5 மாநில தேர்தலில் பிஜேபி 3 மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் காரணத்தால் 2024 ஆம் ஆண்டும் பொதுத் தேர்தல்களிலும் அதிகப்படியான லாபத்தைப் பதிவு செய்ய வாய்ப்புகள் உள்ளதாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.
இதன் எதிரொலியாகவே இன்று காலை வர்த்தகம் துவங்கும் போத 1000 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது. சென்செக்ஸ் குறியீடு 68000 புள்ளிகளைக் கடந்துள்ளது,நிஃப்டி 20,602.50 புள்ளிகளைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் துவங்கி முதல் 15 நிமிடத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டுச் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்தது.

ஆனால் இந்த உயர்வு இதோடு நிற்கவில்லை, அக்டோபர் 2022 க்குப் பிறகு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு மிகப் பெரிய ஒரு நாள் வளர்ச்சி அளவீடாக இன்று சென்செக்ஸ் 2.05 சதவீதமும், நிஃப்டி 2.07 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் மிட்கேப் இன்டெக்ஸ் 12வது நாளாகத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
நிஃப்டி வங்கி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் ஒரு மணிநேரத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டது, இதன் மூலம் நிஃப்டி வங்கி குறியீடு வரலாற்று உச்சத்தை எட்டியது மற்றும் ஏப்ரல் 2022 க்குப் பிறகு அதன் சிறந்த வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.
சென்செக்ஸ் 1,384 புள்ளிகள் உயர்ந்து 68,865 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 419 புள்ளிகள் உயர்ந்து 20,687 ஆகவும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் பங்குச்சந்தையின் மூலதன மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஓரே நாளில் 6 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. மேலும் நிஃப்டி வங்கி 1,617 புள்ளிகள் உயர்ந்து 46,431 ஆகவும், மிட்கேப் குறியீடு 536 புள்ளிகள் அதிகரித்து 43,919 ஆகவும் முடிவடைந்தது.
நிஃப்டி 50 குறியீட்டில் எய்ச்சர் மோட்டார்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், பிபிசிஎல் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டிய பங்குகளாக உள்ளது. எச்டிஎஃப்சி லைஃப், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, சன் பார்மா மற்றும் டைட்டன் கம்பெனி ஆகியவை நஷ்டமடைந்தன. நிஃப்டி பார்மா மற்றும் மீடியாவைத் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் பச்சை நிறத்தில் முடிவடைந்தன.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications