சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமை நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவைச் சந்தித்த பின்னர், முன்னணி பங்குச்சந்தை குறியீடுகளான நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் புதன்கிழமையில் மீண்டும் உயர்ந்தன.
மும்பை பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தைப் போலவே இன்றும் நிலையற்ற தன்மை அதிகமாக இருந்தது, இன்றைய வர்த்தகத்தின் ஃப்ரீ டிரேடிங் நேரத்தில் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் இருந்தது. ஆனால் வர்த்தகம் துவங்கிய பின்பு 100 புள்ளிகளுக்கு மேல் சரிவையும் சந்தித்தது பல முதலீட்டாளர்களைப் பீதியில் ஆழ்த்தியது.

ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயரத் துவங்கியது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 10.30 மணியளவில், சென்செக்ஸ் குறியீடு கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. சென்செக்ஸ் 510 புள்ளிகள் அதிகரித்து 72,602 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. நிஃப்டி 50 குறியீடு 173.45 புள்ளிகள் (0.76%) உயர்ந்து 22,057 புள்ளிகளில் இருந்தது.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, பாரதிய ஜனதா கட்சி (BJP) 240 இடங்களை வென்றது, ஆனால் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை எட்டவில்லை. இதனால் திஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயடு ஆகியோரின் கூட்டணியில் NDA 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க உள்ளது.
இதனால் தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 50 மற்றும் மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் இரண்டுமே தடுமாற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் குறியீட்டில் ஹெச்யூஎல், நெஸ்லே இந்தியா, ஹெச்.சி.எல் டெக், ஏசியன் பெயண்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐடிசி ஆகியவை உயர்வில் திறந்தது. அதே நேரத்தில் பவர் கிரிட், Larsen & Toubro (L&T), என்டிபிசி, எஸ்.பி.ஐ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை குறைந்த விலையில் திறந்தன.
மேலும் துறை ரீதியாக பார்க்கும் போது நிஃப்டி எஃப்.எம்.சி.ஜி 3% அதிகரித்து, ஹெச்யூஎல், மாரிகோ, மற்றும் டாபூர் இந்தியா ஆகிய பங்குகள் அதிகமாக உயர்ந்தது. நிஃப்டி ஆட்டோ, ஐடி, மீடியா, மருந்து மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளும் தலா 1% க்கும் மேல் உயர்வில் திறந்தன.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications