இந்திய சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இது ரொம்ப நல்ல விஷயம் தான். ஏனெனில் கடந்த பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இதுவரையில் சென்செக்ஸ், நிஃப்டி 10% மேல் ஏற்றம் கண்டுள்ளது.

இதனால் பட்ஜெட்டுக்கு பிறகு முதலீட்டாளர்கள் லாபம் மழையில் நனைந்து வருகின்றனர். இது இந்த வாரத்திலும் நிலைக்குமா? ஏற்றம் தொடருமா? இல்லை நடப்பு வார இறுதியினை போல் முடியுமா?
ஏனெனில் இந்திய சந்தைகள் பட்ஜெட்டுக்கு பிறகு தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன. குறிப்பாக பட்ஜெட் வாரத்தில் நிஃப்டி 15,257 புள்ளிகளை தொட்டது. இதே சென்செக்ஸ் 51,836 புள்ளிகளை தொட்டது.
இது குறித்து நிபுணர்கள் நிஃப்டிக்கு 7,000 புள்ளிகளை தொட 18 வருடம் ஆனது. ஆனால் இதே 15,000 புள்ளிகளை 7 வருடத்தில் தொட்டுள்ளது. ஆக எதிர்வரும் நாட்களில் சந்தைகளில் சில ஒருங்கிணைப்பு இருக்கலாம் என்றும் ஆய்வளார்கள் எதிர்பார்க்கின்றனர். அதாவது சந்தை இன்னும் வலுவடையலாம் என எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்தானது அதிகரித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் அன்னிய முதலீடுகளின் வரத்தானது கேஸ் மார்க்கெட்டில் 6,000 கோடி ரூபாயாகும்.
இதே மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய வாரத்தில் சந்தைகள் 6.5% சரிவினைக் கண்டது. ஆனால் இதே பட்ஜெட் வாரத்தின் முடிவில் 1% ஏற்றத்தில் காணப்பட்டது. இந்த வாரத்தில் நிஃப்டி மிட்கேட் 100 குறியீடுகள் 2% அதிகரித்தும் காணப்பட்டது.
இதற்கிடையில் மீடியம் டெர்மில் சந்தைகள் சரிவினைக் காணலாம். அப்படி சரியும்பட்சத்தில் 50,500 அல்லது 50,600 லெவலை தொடலாம். ஒரு வேளை ஏற்றம் கண்டால் 51,900, அதன் பிறகு 52,750 புள்ளிகளையும் தொடலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நடப்பு வாரத்தில் சந்தைகள் ஒரு சிறிய இழுபறியை கண்டன. ஏனெனில் கரடிகள் நிஃப்டி 50ஐ 14,977 வரை தள்ளின. ஆனால் மீண்டும் குறைந்த விலையில் வாங்கப்பட்டதால், மீண்டு சந்தை ஏற்றத்தில் தான் முடிவடைந்தது. வரவிருக்கும் வாரத்திலும் சந்தை இழுபறியை சந்திக்கலாம். காளைக்கும் கரடிக்கும் இடையில் இழுபறி இருக்கலாம். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்ய வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications