வாரத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று சரிவிலேயே தொடங்கியுள்ளன.
வாரத்தின் முதல் மூன்று நாட்கள் ஏற்றத்தில் புதிய உச்சத்தினை கண்டு வந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக சரிவினைக் கண்டுள்ளது. இது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தைகளும் சரிவில் தொடங்கியுள்ளன.
ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சற்று இறக்கம் கண்டு காணப்பட்டது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 95 புள்ளிகள் குறைந்து, 43,262.07 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 40.40 புள்ளிகள் குறைந்து 12,650.40 ஆகவும் தொடங்கியது.

கடந்த வாரத்தில் அன்னிய முதலீடுகளின் வரத்து அதிகரிப்பு காரணமாகவே சந்தை புதிய உச்சத்தினை கண்டு வந்த நிலையில், நேற்று நிதி ஊக்கம் பற்றிய அறிவிப்பின் எதிரொலியாக இந்திய சந்தைகள் சற்று தடுமாற்றத்தில் முடிவடைந்தன. எனினும் சந்தையில் நடப்பு மாதத்தில் 31,296 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வரத்து வந்துள்ளது. இதுவே அக்டோபர் மாதத்தில் 14,537.40 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வந்தது. அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வரத்து அதிகப்படியான வீழ்ச்சியினை தடுத்துள்ளது எனலாம். அதோடு புராப்பிட் புக்கிங் காரணமாகவும் சந்தை சற்று சரிவினைக் கண்டு வருகிறது.
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் பெரும்பாலும் சற்று சரிவிலும், சிலவை மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், ரிலையன்ஸ், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, லார்சன், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ, லார்சன், ஆக்ஸிஸ் வங்கி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 131.94 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 43,225.25 ஆகவும், இதே நிஃப்டி 36.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 12,654.45 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications