இந்திய பங்குச்சந்தைக்கு இன்று கருப்பு நாளாக மாறியுள்ளது, காலை வர்த்தகம் துவங்கிய போதே சரிவுடன் துவங்கியது மட்டும் அல்லாமல் 2 முக்கிய பிரச்சனைகள் முதலீட்டாளர்களை மிரட்டி வந்தது. எதிர்பார்த்தபடியே பெரும் இழப்பை இந்திய முதலீட்டாளர்கள் எதிர்கொண்டனர்.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 825.74 புள்ளிகள் சரிந்து 64,571.88 புள்ளிகளை அடைந்துள்ளது. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக சென்செக்ஸ் குறியீடு 916 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 64,502.68 புள்ளிகள் வரையில் சரிந்தது.

சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் பைனான்ஸ் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மட்டுமே வெறும் 0.30 சதவீத உயர்வுடன் தப்பித்தது. மற்ற 28 நிறுவனங்களும் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.
குறிப்பாக ஹெச்சிஎல் டெக், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், JSW ஸ்டீல் ஆகியவை 2 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. நிஃப்டி குறியீடு சென்செக்ஸ் குறியீட்டை போல் ஒரே நாளில் 260.90 புள்ளிகள் சரிந்து 19,281.75 புள்ளிகளை எட்டியுள்ளது.
இந்த தடாலடியான சரிவின் மூலம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 7.77 லட்சம் கோடி ரூபாய் வரையிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர். இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பீடு 311.12 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் அடுத்த சில மாதங்களுக்கு உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறிய நிலையில், கடந்த 2 நாட்களாக டாலர் மதிப்பும், அமெரிக்க பத்திர முதலீடுகளும் அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டாலர் இன்டெக்ஸ் 106.30 வரையில் உயர்ந்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க பத்திர சந்தையில் முதலீடுகள் அதிகரித்தது தான். கடந்த 2 நாட்களில் பங்குச்சந்தை, தங்கம் மற்றும் பிற முதலீட்டு சந்தையில் இருக்கும் முதலீடுகள் அனைத்தும் பத்திர சந்தை மீது திரும்பியது.
இதன் மூலம் பத்திர சந்தை மீதான முதலீட்டு லாப அளவுகள் 4.98 சதவீதத்தை தொட்டு 5 சதவீதம் என வரலாற்று உச்ச அளவீட்டை தொட்டு உள்ளது. இதேபோல் ஐரோப்பிய மத்திய வங்கியும் பணவீக்க பாதிப்புகளை குறைக்க வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வைக்க முடிவு செய்துள்ளது.
இதோடு இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை மூலம் முதலீட்டு சந்தையில் ஏற்பட்டு உள்ள பாதிப்பு பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரின் மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் பத்திர சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வருகிறது.
இதோடு சர்வதேச பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு அதிகப்படியான விலைக்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications