உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நேற்று புதிய வரலாற்று உச்ச அளவான 73427.59 தொட்டுப் பதிவு செய்த நிலையில், இன்று 1400 புள்ளிகள் சரிவுடன் துவங்கி முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடுகள் பெரும் சரிவுடன் வர்த்தகம் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகம் துவங்கியதில் இருந்து அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்துவிட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 1699.47 புள்ளிகள் சரிந்து 71,429.30 புள்ளிகளைத் தொட்டது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 1628.01 புள்ளிகள் சரிந்து 71.500.76 புள்ளிகளை அடைந்துள்ளது. நிஃப்டி குறியீடு 460.35 புள்ளிகள் சரிந்து 21,571.95 புள்ளிகளை தொட்டு உள்ளது. சென்செக்ஸ் 2.23 சதவீதமும், நிஃப்டி 2.09 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் 30 நிறுவனங்கள் பட்டியலில் அதிகப்படியான நிறுவனங்கள் சரிவில் உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் வங்கி பங்குகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக ஹெச்டிஎப்சி வங்கி மோசமாகப் பாதிப்பை எதிர்கொண்டு சுமார் 700 புள்ளிகள் சரிவுக்குக் காரணமாக இருந்தது.
ஹெச்டிஎஃப்சி வங்கி: செவ்வாய்க்கிழமை வெளியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் டிசம்பர் காலாண்டு முடிவில் இதன் நிகர லாபம் கடந்த வருடத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட 34% உயர்ந்து ரூ.16,372.54 கோடியாக உள்ளது. டிசம்பர் காலாண்டில் நிகர வட்டி வருமானம் வருடாந்திர அடிப்படையில் 24% அதிகரித்து ரூ.28,471.34 கோடியாக உள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ய முக்கியமான காரணம் இவ்வங்கியின் காலாண்டு முடிவில் மார்ஜின் அளவு மோசமாக உள்ளது மட்டும் அல்லாமல் சந்தை கணிப்பை விடவும் குறைவாக உள்ளது. இதன் மூலம் NIM எனப்படும் வட்டி விகிதம் மீதான மார்ஜின் அளவு குறுகிய காலப் பிரச்சனையாகச் சந்தை ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகள் பிரச்சனை: பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரான் நாட்டின் சிறப்பு ராணுவ குழு மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பின் இலக்குகளை ஏவுகணைகளால் தாக்கிய ஈரான் தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அவசர மறுசீரமைப்பில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்க மத்திய வங்கி: இதேவேளையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாகப் பெடரல் ரிசர்வ் கவர்னர் கிரிஸ்டோபர் வாலர் நாட்டின் பணவீக்கம் சரிந்துள்ளது தொடருமா என்பதை உறுதி செய்யப்பட்ட பின்பே வட்டி விகிதத்தைக் குறைக்க முடியும் எனப் பேசியுள்ளார்.
இவருடைய பேச்சு அமெரிக்கப் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் இந்திய சந்தையையும் பாதித்தது. இதேவேளையில் மத்திய கிழக்குப் பிரச்சனை காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு 103.43 ஆக உயர்ந்துள்ளது.
இதுவும் இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. சர்வதேச பிரச்சனைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் மீண்டும் பத்திர சந்தை நோக்கிச் செல்ல துவங்கும் நிலையும் உருவாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications