நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையினை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகின்றார்.
இந்த ஆய்வறிக்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான அறிவிப்புகள் தான்.
எதிர்பார்த்ததை போலவே 22- 2023ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமாது 8 - 8.5% வளர்ச்சி காணலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சந்தை நிலவரம்
இந்த நிலையில் இந்திய பங்கு சந்தையானது தொடர் உச்சத்தினை கண்டு வருகின்றது, குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 1012.56 புள்ளிகள் அதிகரித்து, 58,212.79 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 292.50 புள்ளிகள் அதிகரித்து, 17,394.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
குறியீடுகள்
இதற்கிடையில் சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ டெக், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் கிட்டதட்ட 3% ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் 2% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, பிபிசிஎல், விப்ரோ, இன்ஃபோசிஸ், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, கோடக் மகேந்திரா, யுபிஎல், கோல் இந்தியா, ஹெச் யு எல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், விப்ரோ, பஜாஜ் பின்செர்வ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, கோடக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ஏன் இந்த ஏற்றம்?
பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த ஜிடிபி கணிப்பானது சற்று குறைந்திருந்தாலும், ஷார்ட் கவரிங் என்பது அதிகமாக உள்ள நிலையில், சந்தையானது எதிர்பாராத அளாவு ஏற்றத்தினை கண்டு வருகின்றன. மேலும் கொரோனா, ஓமிக்ரானால் பாதிக்கப்படும் துறைகளுக்கு நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டிலும் முக்கியத்துவம் அளிக்கப்படலம் என்ற நம்பிக்கையின் மத்தியில் சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications