நேற்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 40, 653 புள்ளிகளில் ஒரு வரலாற்று உச்சம் தொட்டு நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 40,630 என ஒரு சிறிய கேப் டவுனில் தான் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மேலும் இறக்கம் காணத் தொடங்கி இருக்கிறது. அந்த இறக்க டிரெண்ட் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளியாக 40,630 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. ஆனால் இப்போது வரை இன்றைய குறைந்தபட்ச புள்ளியாக 40,503 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதாவது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து சுமார் 150 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி இண்டெக்ஸ் நேற்று மாலை 12,012 என்கிற வரலாற்று உச்ச புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே நிஃப்டி 11,987 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இறக்கம் காணத் தொடங்கியது. அந்த இறக்கம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளியாக 11,966 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து சுமார் 45 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 10 பங்குகள் ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. நிஃப்டியின் 50 பங்குகளில் 17 பங்குகள் விலை ஏற்றத்திலும், 33 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
பி.எஸ்.இ-யில் 1,341 பங்குகள் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. 688 பங்குகள் விலை ஏற்றத்திலும், 573 பங்குகள் விலை இறக்கத்திலும், 80 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. 1,341 பங்குகளில் 33 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 19 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் எஃப் எம் சி ஜி, பார்மா, பொதுத் துறை வங்கி தவிர மற்ற துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தமாகி வருகின்றன. ரியாலிட்டி மட்டுமே அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் ஏற்றம் காண வைத்துக் கொண்டு இருக்கின்றன.
யெஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. யூபிஎல், பார்டி இன்ஃப்ராடெல், சன் பார்மா, டாடா ஸ்டீல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications