41,000-த்தில் நிலை கொண்ட சென்செக்ஸ்,..! 12,100-ல் நிற்கும் நிஃப்டி..!

சென்செக்ஸ் நேற்றைப் போலவே, இன்றும் புதிய உச்ச புள்ளியாக 41,163 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த பங்குச் சந்தை செய்திகளிலேயே, சந்தை ஏற்றம் கண்டால் 41,250 வரை ஏற்றம் காணலாம் எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தைகளைத் தவிர உலக சந்தைகளில் பெரும்பாலான சந்தைகள் இன்று இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. ஐரோப்பாவின் பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன் ஆகிய மூன்று சந்தைகளும் -0.19 முதல் -0.38 வரை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அதே போல ஆசியாவில் அனைத்து சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய சந்தைகளில் அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -0.47 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

41,000-த்தில் நிலை கொண்ட சென்செக்ஸ்,..! 12,100-ல் நிற்கும் நிஃப்டி..!

நேற்று மாலை சென்செக்ஸ் 41,080 என்கிற புதிய உச்சத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 41,161புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,163 என்கிற உச்ச புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் தற்போது மதியம் 2.15 மணி அளவில் சென்செக்ஸ் 33 புள்ளிகள் மட்டுமே ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

அதே போல நிஃப்டி நேற்று மாலை 12,100 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 12,132 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 12,144 என்கிற உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட சுமார் 23 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. பி.எஸ்.இ-யில் 2,551 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 1,168 பங்குகள் ஏற்றத்திலும், 1,192 பங்குகள் இறக்கத்திலும், 191 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மொத்தம் 2,551 பங்குகளில் 43 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 100 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.

பார்தி இன்ஃப்ராடெல், யூபிஎல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஹீரோ மோட்டோ கார்ப், ஹெச்டிஎஃப்சி, ஹெச் டி எஃப் சி பேங்க், பஜாஜ் ஃபனான்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.50 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 62.83 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+