அமெரிக்கப் பணவீக்க விகித தரவுகள் வெளியே வரும் வேளையிலும், அமெரிக்க வட்டி விகித குறைப்பு தொடர்பான கணிப்புகளாலும் ஆசிய சந்தைகள் இன்று காலை முதல் உயர்வுடன் இருந்தது. இதன் வாயிலாக இன்று 2024 ஆம் நிதியாண்டின் இறுதி நாளில் வர்த்தகத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் உறுதியான நிலையில் வர்த்தகம் செய்தாலும் வர்த்தகம் முடியும் நேரத்தில் சரிந்தது.
சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 1,100 புள்ளிகள் அதிகரித்து 22,450 ஐ தாண்டியது. நிஃப்டி 50 குறியீடும் அதே போன்று உயர்வைக் கண்டது. இதன் மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்துப் பங்குகளின் சந்தை மூலதனம் ரூ.4.78 லட்சம் கோடி உயர்ந்து ரூ.388.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ஆனால் வர்த்தகம் முடியும் தருவாயில் தேசிய பங்குச்சந்தையில் (NSE) நிஃப்டி 50 குறியீடு 0.92% அதிகரித்து 22,327 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தையின் (BSE) சென்செக்ஸ் குறியீடு 0.9% உயர்ந்து 73,651 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. இதன் மூலம் 2024ஆம் நிதியாண்டில் நிஃப்டி 29% மற்றும் சென்செக்ஸ் 25% வளர்ச்சியடைந்துள்ளன.
இதன் மூலம் 2024 ஆம் நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் இந்திய மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பும் வியாழக்கிழமை ரூ.3.33 லட்சம் கோடி அதிகரித்து ரூ.386.97 லட்சம் கோடியாக உயர்ந்தது.
2024ஆம் நிதியாண்டைப் பொறுத்தவரை, பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.128.8 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் மற்றும் பொது துறை வங்கிகள் போன்ற முக்கிய துறைகள் அனைத்தும் இந்த நிதியாண்டில் இல் 80% முதல் 140% வரை சிறப்பான வளர்ச்சியைக் கண்டன.
அமெரிக்காவில் சமீபத்தில் வெளியான பணவீக்க தரவுகள் எதிர்பார்க்கப்பட்டதுக்கு அதிகமாக இருந்ததால், வட்டி விகிதங்களைக் குறைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்ற கவலைகள் எழுந்தன.
ஆனால், இந்த மாத தொடக்கத்தில் நடந்த பணக்கொள்கை கூட்டத்தில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கருத்துக்கள் கூடுதல் கவலைகளைக் கொடுத்தது, அதாவது பெடர்ல் வங்கி 2024ல் 3 முறை வட்டி குறைக்கப்படும் என கூறப்பட்டாலும், ஒரு முறைக்கு மட்டும் தான் வாய்ப்பு எனக் கூறப்படுகிறது.
இதேபோல் ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று சந்தைகள் எதிர்பார்க்கின்றன, இதை விட முக்கியமாக அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைத்தால் ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டியைக் குறைக்க உள்ளது. ஆனால், வெள்ளிக்கிழமை வெளியாகும் பணவீக்க தரவுகள் இந்த முடிவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications