அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை உயர்த்தியதை தற்காலிகமாக நிறுத்தியதற்கு ஏற்ற வகையில் அமெரிக்க பணவீக்கம் எதிர்பார்த்ததை விட குறைவான அளவீட்டை பதிவு செய்துள்ளது.
இதேவேளையில் அமெரிக்க பத்திரங்கள் மீதான அவுட்லுக் மாற்றியது மூலம் அமெரிக்க பத்திர சந்தையில் இருந்த முதலீடு வெளியேறி பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தையில் குவிந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை சாதகமான சூழ்நிலையில் இந்திய பங்குச்சந்தையும் உயர்வுடன் துவங்கி முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

இன்று காலை வர்த்தகம் துவங்கி ஒரு மணிநேரத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 630 புள்ளிகள் உயர்ந்து 65,578.95 புள்ளிகளையும் ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 200 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 19,653.35 புள்ளிகளை அடைந்தது.
புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 742 புள்ளிகள் உயர்ந்து 65,675.93 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி 50 குறியீடு 231.90 புள்ளிகள் உயர்ந்து 19,675.45 புள்ளிகளை அடைந்தது. சென்செக்ஸ் குறியீடு ஓரே நாளில் 813.78 புள்ளிகள் உயர்ந்து பங்குச்சந்தை சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பை 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்க நுகர்வோர் விலை குறியீடு அக்டோபர் மாதம் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் செப்டம்பர் மாதத்தில் 3.7% உயர்ந்த பிறகு, அக்டோபர் மாதத்தில் 3.2% ஆக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபரில் நான்கு மாதங்களில் குறைந்தபட்சமாக 4.87% ஆக குறைந்துள்ளது.
மேலும் வால் ஸ்ட்ரீட் தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் திங்களன்று இந்திய பங்குகளை marketweight அளவில் இருந்து overweight என்ற நிலைக்கு உயர்த்தியது. இதன் அமெரிக்க பத்திர சந்தையில் இருந்து வெளியேறிய அதிகப்படியான முதலீடுகள் இந்திய பங்குச்சந்தையில் குவிந்துள்ளது.
இதன் வாயிலாக நீண்ட காலத்திற்கு பின்பு டெக் மஹிந்திரா, விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது. மேலும் டாப் 30 நிறுவனங்களில் பவர் கிரிட், இண்டஸ்இந்த் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, சன் பார்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் ஆகியவை மட்டுமே சரிவுடன் காணப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications