1300 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்..! பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டம்..!!

5 மாநில தேர்தலில் ஆளும் கட்சியான பிஜேபி பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஒட்டுமொத்த வட இந்தியாவும் தற்போது BJP கட்சியின் காவி நிறமாக மாறியுள்ளது. இதனால் காலை பங்குச்சந்தை எதிர்பார்த்த படியை உயர்வுடன் துவங்கியது, ஆனால் வியப்பு அடையும் வகையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டது.

சென்செக்ஸ் குறியீடு 68000 புள்ளிகளைக் கடந்துள்ளது,நிஃப்டி 20,602.50 புள்ளிகளைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் துவங்கி முதல் 15 நிமிடத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டுச் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்தது.

1300 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்..! பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டம்..!!

இந்தியாவில் 5 மாநில தேர்தலில் 4 மாநில முடிவுகள் நேந்று வெளியான நிலையில், அதில் 3 மாநிலத்தில் பிஜேபி பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று உள்ளது. தெலுங்கானாவில் ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ் கட்சி தோல்வியை சந்தித்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்டு உள்ள மிசோரம் மாநிலத்தில், மாநில கட்சிகளான சோரம் பீப்பள் மூவ்மென்ட் கட்சி முன்னிலையில் உள்ளது. இதேபோல் காங்கிரஸ் 2 இடத்திலும், பிஜேபி 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.

5 மாநில தேர்தில் 3 மாநிலத்தில் பிஜேபி பெரும்பான்மை உடன் வெற்றி பெற்ற காரணத்தால் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலில் பிஜேபி-க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை காட்டுகிறது என பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நேற்று காலையில் இருந்து டிவிட்டரில் கொக்கரித்து வந்தனர்.

இதன் எதிரொலியாக திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1005.47 புள்ளிகள் உயர்ந்து 68,486.66 புள்ளிகளை எட்டியுள்ளது. சென்செகஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மாருதி சுசூகி தவிர அனைத்து நிறுவனங்களும் உயர்வுடன் உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, என்டிபிசி, மஹிந்திரா, எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி வங்கி ஆகியை 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீத உயர்வில் உள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 68,587.82 புள்ளிகளை எட்டியுள்ளது.

தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி குறியீடு 289.50 புள்ளிகள் உயர்ந்து 20,557.40 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 20,602.50 புள்ளிகளை எட்டியுள்ளது.

தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகளில் காங்கிரஸ் 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகளில் பிஜேபி 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, ராஜஸ்தானில் மொத்தம் 199 தொகுதிகளில் பிஜேபி 115 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, சட்டிஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகளில் பிஜேபி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+