புதிய உச்சத்தில் இந்திய பங்கு சந்தைகள்.. 43,000 தாண்டி சென்செக்ஸ் வர்த்தகம்..!

வாரத்தின் இரண்டாவது நாளான இன்றே காலையில் ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 132 புள்ளிகள் அதிகரித்து, 42,730 ஆக தொடங்கியது.

இந்த நிலையில் தொடக்கத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 228 புள்ளிகள் அதிகரித்து, 42,825 ஆகவும் இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 62 புள்ளிகள் அதிகரித்து 12,523 புள்ளிகளாகவும் தொடங்கியது. இந்த நிலையில் 718 பங்குகள் ஏற்றத்திலும், 294 பங்குகள் வீழ்ச்சியிலும், 48 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

புதிய உச்சத்தில் இந்திய பங்கு சந்தைகள்.. 43,000 தாண்டி சென்செக்ஸ் வர்த்தகம்..!

சர்வதேச சந்தையின் எதிரொலியாகவே, இந்திய சந்தையும் ஏற்றத்தினை கண்டு வருகின்றது. குறிப்பாக ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து, விமானம், சுற்றுலா சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் உள்ளது. இது கொரோனாவிற்கான தடுப்பு மருந்து 90% மேல் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க நிறுவனம் அறிவித்ததையடுத்து ஏற்றம் கண்டன. இதற்கிடையில் இந்திய சந்தையும் பட்டையை கிளப்பி வருகின்றது எனலாம்.

அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்து 74.06 ரூபாயாக தொடங்கியது. இது நேற்று 74.14 ரூபாயாக வீழ்ச்சி கண்டு முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது ரூபாயின் மதிப்பு 74.22 ரூபாயாக வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.

சென்செக்ஸ் குறியீட்டில் இந்தஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ், நெஸ்டில் இந்தியா, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது.

இதுவே நிஃப்டி குறியீட்டில் உள்ள குறியீட்டில் இந்தஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், சிப்லா, டெக் மேந்திரா, ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ், நெஸ்டில் இந்தியா, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 534 புள்ளிகள் அதிகரித்து, 43,131 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தையன் நிஃப்டி 130 புள்ளிகள் அதிகரித்து 12,591 ஆகவும் காணப்படுகிறது.

இன்று காலையில் பார்த்ததை போல, கொரோனா தாக்கம், லாக்டவுன், முடங்கி போன பொருளாதாரம் என பல காரணிகள் சந்தைக்கு பாதகமாக இருந்தாலும், ஊக்கத் தொகை, குறைவான வட்டி விகிதம், அன்னிய முதலீடுகள் வரத்து உள்ளிட்ட பல காரணிகளால் சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. அதுவும் புதிய உச்சத்தினை தொடர்ந்து தொட்டு வருகின்றன. அதுவும் ரூபாயின் மதிப்பு சரிந்திருந்த போதிலும், சந்தை ஏற்றம் கண்டு, சர்வதேச சந்தையின் பாணியில் இருந்து வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+