பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 4வது பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று காலை அமர்வில் பங்கு சந்தையானது நல்ல ஏற்றத்தினை கண்டது. எனினும் பிற்பாதியில் சரிவினைக் கண்டு மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
காலை அமர்வில் 900 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், தற்போது (3.05 மணி நிலவரப்படி) 803.27 புள்ளிகள் அதிகரித்து, 58,817.27 புள்ளிகளாக காணப்படுகின்றது.
இதே போல நிஃப்டி 227 புள்ளிகள் அதிகரித்து, 17,566.85 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இன்று காலை முதல் கொண்டே பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வந்த சந்தையானது, பிற்பாதியில் சரிவினைக் கண்டு வருகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்
இன்றைய வர்த்தக அமர்வில் பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இஎஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர்,பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும், பிஎஸ்இ மெட்டல்ஸ் 4% மேலாகவும், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ் 2% மேலாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், சன் பார்மா, இந்தஸ்இந்த் வங்கி, ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பிபிசிஎல், ஐஓசி, டாடா மோட்டார்ஸ், எம் & எம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், சன் பார்மா, இந்தஸ்இந்த் வங்கி, லார்சன், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம் & எம், பவர் கிரிட் கார்ப், எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
பிபிசிஎல் பலத்த சரிவு
இன்றைய சந்தை அமர்வில் டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக பிபிசிஎல் பங்கானது டாப் லூசராகவும் உள்ளது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகரலாபம் 48% அதிகரித்து, 2805.09 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 1900.63 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. லாபம் அதிகரித்து இருந்தாலும் இந்த பங்கின் விலையானது 4.51% குறைந்து, 378.95 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications