கடந்த வாரத்தில் நல்ல ஏற்றம் கண்ட இந்திய பங்கு சந்தைகள், வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 47 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 41,634 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 5 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 12,266 ஆக வர்த்தகமாகி வருகிறது.
இதே அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வாரத்தின் முதல் நாளான இன்று 71.15 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சந்தையில் முதலீட்டாளர் தாங்கள் வாங்கிய பங்குகளை லாபத்துடன் விற்கும் பொருட்டு, தங்களிடம் உள்ள பங்குகளை விற்க முற்படுவதால் செல்லிங் பிரஷர் அதிகமாக உள்ளது. இதனால் சந்தை இறங்கு முகத்திலேயே உள்ளது.
இந்த நிலையில் 363 பங்குகளின் விலை அட்வான்ஸாகவும், 298 பங்குகள் இறங்கு முகமாகவும், 48 பங்குகள் எந்த வித மாற்றமும் இல்லாமல் வர்த்தகமாகியும் வருகிறது.
இதில் ஹிண்டால்கோ, வேதாந்தா, விப்ரோ, பிபிசிஎல், டைட்டன், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் கெயில், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
குறிப்பாக நிஃப்டி இண்டெக்ஸில் யுபிஎல், ஜீ எண்டர்டெயின்மென்ட், பிபிசிஎல், வேதாந்தா, ஜே.எஸ்.டபள்யூ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ், கோல் இந்தியா, நெஸ்டில், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் வேதாந்தா பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் மகேந்திரா, டாடா ஸ்டீல், எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ், டிஎம் எல் - டி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச் டிஎஃப்சி, பவர் கிரிட் கார்ப் பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சந்தை நிபுணர்கள் 2020ல் சந்தை மீள்ச்சியடையும் என்று கூறுகிறார்கள். இதே ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் நன்கு ஏற்றம் காணலாம் என்றும் மதிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications