உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டான்லி, இந்திய பங்குச் சந்தை 2026ஆம் ஆண்டில் மீண்டும் வேகம் பெறும் என்று உறுதியாகக் கூறியுள்ளது. இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தடுமாறி வருகின்றனர்.
இதேவேளையில் அமெரிக்காவின் வரி விதிப்பு, கச்சா எண்ணெய் கொள்முதலில் மாற்றம், பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் தடுமாற்றம், ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள், நாணய மதிப்பில் தடுமாற்றம் என பல காரணங்களால் இந்திய முதலீட்டு சந்தை கடந்த 3-4 மாதங்களாக அதிகப்படியான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

ஆனாலும் உள்நாட்டு முதலீட்டாளர்களும், அடுத்தடுத்து வெளியாகும் ஐபிஓ-க்கள் என மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து தனது வளர்ச்சி பாதையை தக்கவைத்துள்ளது. இந்த நிலையில் மோர்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள அறிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
மார்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள தனது சமீபத்திய strategy outlook அறிக்கையில், இந்திய பங்குச்சந்தை அடுத்த ஆண்டு எந்த சூழ்நிலையில் எப்படி இயங்கும் என கணித்துள்ளது. இந்த அறிக்கை தான் பல முதலீட்டாளர்களுக்கு துருப்பு சீட்டாக விளங்குகிறது.
நவம்பர் 18ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் சரிந்து 84,735 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி 50 குறியீடு 85 புள்ளிகள் சரிந்து 25,928.35 புள்ளிகளை அடைந்துள்ளது.
இந்த நிலையில் சென்செக்ஸ் குறியீடு டிசம்பர் 2026இல் முதலீட்டு சந்தை மிகவும் சிறப்பாக இருக்கும் சூழலில் 1,07,000 புள்ளிகளைத் தொடும் என்று கணித்துள்ளது. தற்போதைய நிலையிலிருந்து இது கிட்டத்தட்ட 27 சதவீத உயர்வு ஆகும். இத்தகைய நிலையை அடைய 30 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
ஆனால் இந்த உயரத்தை எட்ட வேண்டும் என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கொள்கை அளவிலான ஆதரவுகள் தொடர்ந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று மோர்கன் ஸ்டான்லி மிகுந்த எச்சரிக்கை உடன் தெரிவித்துள்ளது. இதேபோல் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு சந்தைகளும் இந்திய சந்தைக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
உதாரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 65 டாலருக்கும் கீழ் தொடர்ந்து நிலையாக இருக்க வேண்டும். உலக நாடுகளின் வரி உயர்வு கொள்கைகள் தளர்த்தப்பட வேண்டும். பணவீக்கக் கொள்கைகள் தொடர்ந்து மறுஆய்வு செய்து செயல்படுத்தப்பட வேண்டும்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையாமல் இருக்க வேண்டும். இவை அனைத்தும் சாதகமாக அமைந்தால், 2025 முதல் 2028 நிதியாண்டு வரை சென்செக்ஸ் குறியீட்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் லாப வளர்ச்சி ஆண்டுக்கு 19 சதவீதம் என்ற வேகத்தில் வளர்ச்சி அடையும் என்று மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. இந்த அளவீட்டின் அடிப்படையில் தான் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து உயரும் எனவும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 107,000 புள்ளிகளை அடையும் என கணிக்கப்பட்டு உள்ளது.
மார்கன் ஸ்டான்லி-யின் அறிக்கையில் 2026 இறுதிக்குள் சென்செக்ஸ் 95,000 புள்ளிகளை எட்டுவதற்கு 50 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணித்துள்ளது. இது தற்போதைய நிலையிலிருந்து 13 சதவீத உயர்வு ஆகும் என கணித்துள்ளது.
இதுவே இந்திய முதலீட்டு சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் மோசமான சூழல் ஏற்பட்டால் சென்செக்ஸ் 76,000 புள்ளிகள் வரை சரியலாம் என்று மார்கன் ஸ்டான்லி எச்சரித்துள்ளது.
மேசமான நிலை என்றால் உதாரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஒரு பேரலுக்கு 100 டாலருக்கு மேல் உயர்வது, உலக நாடுகள் நாணய கொள்கையை இறுக்கமாவது, வெளிநாட்டுத் சந்தையில் இந்திய தயாரிப்புகளுக்கான டிமாண்ட் குறைவது போன்ற உலகளாவிய பிரச்சனைகள் வந்தால் Bear run உருவாகலாம்.
மார்கன் ஸ்டான்லியின் இந்த அறிக்கை இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026இல் சந்தை மீண்டும் உற்சாகம் பெறும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இதேபோல் கச்சா எண்ணெய் விலையும், வரி விதிப்பு முறையும் அடுத்த வருட முதலீட்டு சந்தைக்கு முக்கியமான அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications