2022-23 நிதியாண்டின் கடைசி நாளில் 4 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வு..!

சென்னை: 2022-23 ஆம் நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் 1100 புள்ளிகள் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களை மனம் குளிர வைத்துள்ளது.

இன்று வாரத்தின் கடைசி வர்த்தக நாள் மட்டும் அல்லாமல் நடப்பு நிதியாண்டின் கடைசி வர்த்தக நாள் என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்றைய வர்த்தகம் துவங்கியது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 1108 புள்ளிகள் வரையில் உயர்ந்து அதிகப்படியாக 59068.47 புள்ளிகள் வரையில் உயர்ந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1031.43 புள்ளிகள் உயர்ந்து 58,991.52 புள்ளிகளை எட்டியுள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், டைட்டன், ஏசியன் பெயின்ட்ஸ் மட்டும் சரிவுடன் உள்ளது.

நிஃப்டி குறியீடு 279.05 புள்ளிகள் உயர்ந்து 17,359.75 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியான 17,381.60 புள்ளிளை அடைந்துள்ளது. நிஃப்டி குறியீட்டின் அனைத்து துறை சார்ந்த குறியீடும் இன்று உயர்வுடன் உள்ளது.

இன்றைய வர்த்தக உயர்வின் மூலம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக உயர்வுக்கு 5 முக்கிய காரணம்..?

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை

அமெரிக்க சந்தையில் நேற்று வங்கி மற்றும் டெக் துறை பங்குகள் உயர்வுடன் முடிந்தது, இதன் மூலம் டாவ் ஜோன்ஸ் 0.4 சதவீதமும், எஸ் அண்ட் பி 500 குறியீடு 0.6 சதவீதமும், நாஸ்டாக் காம்போசிட் குறியீடு 0.7 சதவீதம் உயர்ந்தது. இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் ஆசிய சந்தையைகள் அனைத்தும் உயர்வுடன் துவங்கியது. இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் துவங்கியுள்ளது.

FII முதலீடு

FII முதலீடு

புதன்கிழமை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 1245 கோடி ரூபாயும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 823 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்துள்ளது. வியாழக்கிழமை ராம நவமி பண்டிகை காரணமாக மும்பை பங்குச்சந்தை விடுமுறை என்பதால் இதன் தாக்கம் இன்று எதிரொலித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இன்று காலை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3.34 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் வருகிற மே 2 ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கன்ஸ்யூமர் மற்றும் மெர்ச்சனட் லென்டிங் வர்த்தகத்தை உருவாக்குவதற்கான முடிவுகளை எடுக்க உள்ளது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

அதிகப்படியான அன்னிய முதலீடுகளின் வருகை காரணமாக அமெரிக்க டாவருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82.21 ரூபாயாக உள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய வங்கி

அமெரிக்க, ஐரோப்பிய வங்கி

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கி பிரச்சனைகள் படிப்படியாக குறைந்துள்ளதன் எதிரொலி தான் அமெரிக்க சந்தையில் வியாழக்கிழமை பதிவான உயர்வுக்கு முக்கிய காரணம். இதன் மூலம் வங்கி துறையின் மீது இருந்த அதிர்ப்தி கணிசமாக குறைந்துள்ளதாகவே தெரிகிறது. மேலும் அடுத்த நிதியாண்டில் அதாவது ஏப்ரல் 1 முதல் சென்சென்ஸ் மற்றும் நிஃப்டி தனது பென்ச்மார்க் அளவீட்டை தாண்டி புதிய உச்சக்தை தொடும் என நம்புவோம். Happy Investing..!!

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+