"கிங்" கான் என அறியப்படும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் உருவம் பொறித்த நாணயத்தை பாரிஸில் உள்ள மியூசியம் ஒன்று வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் பாட்ஷா என அறியப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தவர்.
ஷாருக்கானை பெருமைப்படுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள கிரவீன் மியூசியம் ஷாருக்கானின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து முதன்முறையாக இந்த பெருமையை பெறும் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியானதை அடுத்து ஷாருக்கானுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் ஷாருக்கானின் மெழுகு சிலைகள் அமெரிக்கா இங்கிலாந்து ஜெர்மனி சிங்கப்பூர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. பாரிஸில் உள்ள கிரவீன் மியூசியம் என்பது ஒரு மெழுகு சிலை மியூசியம் ஆகும். அடுத்த மாதம் நடைபெற உள்ள லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டில் பதான், ஜவான் உள்ளிட்ட மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இதில் ஷாருக்கான் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் 1,000 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதே போல அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படமும் 1,000 கோடி ரூபாய் வசூல் செய்தது. ராஜ்குமார் இராணி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டங்கி திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்தியாவை கடந்தும் செல்வாக்கு மிக்க ஒரு நபராக ஷாருக்கான் திகழ்ந்து வருகிறார்.
ஷாருக்கான் அவர்களின் சொத்து மதிப்பு 6300 கோடி ரூபாய் ஆகும். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் விளம்பரங்கள் மற்றும் ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் ஆகியவற்றின் மூலமும் இவருக்கு கணிசமான அளவு வருமானம் கிடைக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஷாருக்கானுக்கு சொந்தமானது தான்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications