டெல்லி: மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட 4.83 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், உணவுப்பிரிவு பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில், கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.70 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவுப்பிரிவு பணவீக்கம், மார்ச் மாதம் 8.52 சதவீதமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் 8.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. தி ஹிந்து அறிக்கையின் படி பண வீக்கத்தின் தாக்கம் கிராமப்புற குடும்பங்களில் அதிகமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

உணவுப் பணவீக்கம் என்றால் என்ன?: ஏதேனும் உணவுப் பொருட்களில் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படும் போது தான், அந்த உணவுப் பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்து பணவீக்கம் ஏற்படும் நிலை உருவாகும். இதனையே உணவுப் பணவீக்கம் என்று அழைக்கிறோம்.
சான்றாக ஒரு மூட்டையின் அரிசி விலை 2023 ஆம் ஆண்டில் ரூ. 500 ரூபாயாக இருக்கிறது. அதே அரிசி மூட்டையின் விலை 2024 ஆம் ஆண்டில் ரூ. 700 ரூபாயாக மாறுகிறது. இந்த வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி கிடையாது. பணவீக்கத்தால் உற்பத்தி செலவு அதிகரித்ததன் காரணமாக விற்பனை விலையும் ரூ. 700 ரூபாயாக உள்ளது. இதே 100 மூட்டைகள் அரிசி உற்பத்தியாகி, 2023 ஆம் ஆண்டிலும், 2024 ஆம் ஆண்டிலும் அதே ரூபாயில் விற்பனையாகும்போது பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
இன்னும் எளிதாகச் சொன்னால், உணவுப் பணவீக்கம் என்பது ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு சந்தையில் பொருள்களை வாங்கும் திறன் குறைந்துப் போவதை குறிக்கிறது.
பண வீக்கத்தின் தாக்கம் கிராமப்புற குடும்பங்களில், ஏப்ரல் மாதத்தில் 8.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புர குடும்பங்கள் மார்ச் மாதத்தில் 4.14 சதவீதத்திலிருந்து, ஏப்ரல் மாதத்தில் 4.11 சதவீதமாக மாற்றம் கண்டன என்று தி ஹிந்து அறிக்கை கூறுகிறது.
மாதாந்திர அடிப்படையில் உணவுப் பொருட்களின் விலை 0.5 சதவீதம் அதிகரித்துள்ளன. அதேபோல நகர்ப்புறங்களில் உணவுப் பொருட்களின் விலை, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.03 சதவீதம் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் உணவுப் பொருட்களின் விலை 0.59 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CBI) உயர்வு நகர்ப்புறங்களில், மார்ச் மாதத்தில் 0.6 சதவீதம் அதிகரித்தது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் 0.37 சதவீதம் அதிகமாக இருந்தது.
காய்கறிகளின் பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்தில் 28.3 சதவீதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 27.8 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, இந்த பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
பருப்பு வகைகளும் தொடர்ந்து 11வது மாதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 16.84 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம், மார்ச் மாதத்தில் 17.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்த தானியங்களின் விலை, ஏப்ரல் மாதத்தில் 8.63 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் இறைச்சி மற்றும் மீன் விலைகள், ஏப்ரல் மாதத்தில் 8.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்தது.
மார்ச் மாதத்தில் 3.1 சதவீதமாக இருந்த பழங்களின் விலை, ஏப்ரல் மாதத்தில் 5.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெயின் விலை 12 மாத தொடர்ச்சிக்குப் பிறகு 10 சதவீதத்தில் இருந்து 9.4 சதவீதமாக குறைந்துள்ளது.
சற்று ஆறுதல் தரும் பொருட்கள்: சர்க்கரை, மசாலா, முட்டை மற்றும் பால் போன்ற சில பொருட்களின் விலை உயர்வு குறைந்துள்ளது. சர்க்கரைக்கான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 7.2 சதவீதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 6 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல மசாலா பொருட்களுக்கான பண வீக்கம் கடந்த 22 மாதங்களில் 10 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக குறைந்துள்ளது. முட்டை விலை மார்ச் மாதத்தில் 10.33 சதவீதத்தோடு ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் 7.1 சதவீதம் குறைந்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications