லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மத்தியில் நடந்த மோதல் யாராலும் மறக்க முடியாது, இந்த எல்லை பிரச்சனையை தொடர்ந்து மத்திய அரசு சீனா நிறுவனங்கள் மீதும், முதலீடுகள் மீதும் அதிப்படியாக கட்டுப்பாடுகளை விதித்து இந்திய சந்தைக்குள் அதன் ஆதிக்கத்தை குறைத்தது.
இதுமட்டும் அல்லாமல் தனிநபர் தகவல் பாதுகாப்பு, உள்நாட்டு தரவுகள் சேமிப்பு மற்றும் பகிர்வது குறித்த பிரச்சனை என பல காரணங்களுக்காக ஆன்லைன் கேமிங் முதல் ஷாப்பிங், டெக் சேவைகள், நிதி சேவைகள் வரையில் சுமார் 500க்கும் அதிகமான செயலிகளை தடை செய்தது. இதேபோல் சீனா மற்றும் சீனவுக்கு தொடர்புடைய முதலீடுகள் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும் கட்டமைப்பை உருவாக்கி அதிகப்படியான நெருக்கடியை சீனா உருவாக்கியது.

சமீபத்தில் கூட போலி கடன் சேவை தளங்கள் பெரும்பாலானவை சீன நிறுவனங்களுக்கும், சீன நபர்களுக்கும் தொடர்புடையாக இருப்பதை பல மாநில புலனாய்வு அமைப்புகளும், ஆர்பிஐ, நிதியமைச்சகத்தின் ஒருங்கிணைந்த ஆய்வில் கண்டுப்படிக்கப்பட்டது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் இரு சீன நிறுவனங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு சீன நிறுவனங்கள் குறித்த அறிவிப்பு என்ன..?
இந்தியாலில் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த PUBG கேமிங் செயலியை தடை செய்யப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் PUBG கேம்-ஐ உருவாக்கிய தென்கொரியாவின் Krafton இந்தியாவில் இதே PUBG கேம்-ஐ பட்டி டிக்கரிங் பார்த்து Battlegrounds Mobile India (BGMI) என்ற பெயரில் அறிமுகம் செய்தது. ஆனால் அடுத்த சில மாதத்திலேயே BGMI கேமும் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறையின் அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர் தென்கொரியாவின் Krafton நிறுவனத்தின் Battlegrounds Mobile India (BGMI) கேம்-க்கு 3 மாத சோதனை அடிப்படையில் அரிமுகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
Battlegrounds Mobile India செயலியின் சர்வர் அமைத்துள்ள இடம், டேட்டா செக்யூரிட்டி உட்பட பல நிபந்தனைகள், விதிமுறைகளை பூர்த்தி செய்த காரணத்தால் இந்த 3 மாத சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக ராஜீவ் சந்திரசேகர் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.
இதன் மூலம் அடுத்த 3 மாதத்திற்கு Battlegrounds Mobile India செயலியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து, அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும், மக்கள் இதற்கு அடிமையாகும் அளவு மற்றும் பிற முக்கியமான விஷயங்களை ஆய்வு செய்து இறுதி முடிவை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல், பேஷன் துறையின் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சீனாவின் பேஷன் பிராண்டான SHEIN உடன் புதிய கூட்டணி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் - SHEIN புதிய கூட்டணியில் இந்தியாவில் இருந்து பொருட்களை வாங்குவது மட்டும் அல்லாமல் தனது பொருட்களை ரிலையன்ஸ் டிரென்ஸ் கடைகளின் வாயிலாக விற்கவும் உள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இவ்விரு அறிவிப்புகள் மூலம் மோடி அரசு இதுநாள் வரையில் தடை செய்யப்பட்ட செயலிகள், வர்த்தகங்கள் மீண்டும் இந்தியாவுக்கு வருகிறாதாக என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் நெருக்கடியால சீனாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட தனது முயற்சிகளை நிறுத்திவிட்டு சீனாவுக்கு பொட்டியை கட்டியது.


Click it and Unblock the Notifications