இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்திற்கும் மத்தியில் ஏற்பட்ட பிரச்சனையின் எதிரொலியாக இந்திய அரசு 200க்கும் அதிகமான சீன ஆப்களை தடை செய்யப்பட்ட போது, பேஷன் ஈகாமர்ஸ் தளமான ஷீன் ஆப்-ம் இதில் தடை செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேறியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மத்திய அரசு சீன முதலீடுகளுக்குச் சிறிய அளவில் கருணை காட்டிய வேளையில் JSW-SAIC போன்ற பல முதலீடுகள் வெற்றிகரமாக முடிந்தது. அப்படி தான் ரிலையன்ஸ் ரீடைல் சீனாவில் துவங்கப்பட்டு தற்போது சிங்கப்பூரில் இருந்து இயங்கி வரும் ஷீன் நிறுவனத்துடன் இந்திய வர்த்தகத்திற்கான ஒரு கூட்டணியை அமைந்தது.

ரிலையன்ஸ் - ஷீன் கூட்டணி: இந்த கூட்டணி மூலம் ரிலையன்ஸ்-ன் AJIO தளத்தில் ஷீன் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் விற்பனை செய்யப்படும். இந்த ஒப்பந்தம் இந்தியாவில் ஃபாஸ்ட் பேஷன் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி கொண்டது. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி ஷீன் உடன் கூட்டணி போடும் அளவுக்குப் பெரிய நிறுவனமா..? வாங்க மொத்த கதையும் சொல்கிறேன்.
Shein தோற்றம் மற்றும் வளர்ச்சி: 2008ல் ஒரு சிறு பேஷன் பிராண்டாக உருவாகி 2012 ஆம் ஆண்டில் கிறிஸ் சூ (Chris Xu) என்பவரால் ஷீன் என்ற பிராண்ட் உருவாக்கப்பட்டது. இது சிறிய காலத்திலேயே சீனாவின் ஃபாஸ்ட் ஃபேஷன் நிறுவனமாக இருந்து உலகளாவிய ஆடை சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு மாபெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
உலகளவில் வளர்ந்த Shein: ஷீன் பிராண்ட் நிறுவப்பட்ட சில ஆண்டுகளிலேயே உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை விரிவுபடுத்தி, 250 மில்லியனுக்கும் அதிகமான சோஷியல் மீடியா பாலோவர்களை பெற்றது. சரி வர்த்தகம் என பார்த்தால் 2023 ஆம் ஆண்டில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பின்பும் 45 பில்லியன் டாலருக்கு பொருட்களை விற்பனை செய்து 2 பில்லியன் டாலர் லாபத்தில் மாஸ் காட்டி வருகிறது.

ஷீனின் வெற்றிக்கு காரணம் - சமூக ஊடகம்: ஷீனின் வெற்றிக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. முதலாவதாக, சமூக ஊடகத்தை ஷீன் பெரிய அளவில் பயன்படுத்தி வேகமாக மக்கள் மத்தியில் பிரபலமானது. இதோடு இணையத்தில் செல்வாக்குமிக்க நபர்களை தேர்வு செய்து விளம்பரம் செய்யத் துவங்கியது. இதன் மூலம் குறைந்த காலகட்டத்தில் இளம் தலைமுறையினரைப் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களைப் பெற்றது.
குறைந்த விலை உத்தி: இரண்டாவதாக, மிகவும் குறைந்த விலையில் அதிகளவிலான தயாரிப்புகளை ஷீன் வழங்குகிறது, அதன் வாடிக்கையாளர் அனைவரும் இளம் தலைமுறையினர் என்பதை மனதில் வைத்துக்கொண்டு மலிவான விலையில் பொருட்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது. $10 டாப்ஸ் மற்றும் $5 ஷார்ட்ஸ் எனத் தரமான பொருட்களை நேரடியாக விற்பனை செய்தது.
நேரடி விற்பனை முறை: ஆமாம் நேரடி விற்பனை தான், உலகளவில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் 3ஆம் தரப்பு விற்பனையாளர்களை வைத்து வர்த்தகம் செய்யும் இடத்தில் ஷீன் சற்று மாறுபட்டது. ஷீன் Romwe, MOTF, Cuccoo என 10க்கும் அதிகமான பிராண்டுகளை வைத்துள்ளது இந்த பிராண்டுகளுக்கான பொருட்களை சொந்தமாக ஆர்டர் செய்து தயாரிக்கப்பட்டு விற்கிறது. இதற்காகச் சீனாவில் 5,400 க்கும் மேற்பட்ட மூன்றாம் தரப்பு ஒப்பந்த உற்பத்தியாளர்களின் வலையமைப்பை ஷீன் நிறுவனம் வைத்துள்ளது.

புதிய டிசைன்கள் மற்றும் உற்பத்தி: இதைவிட முக்கியமாக ஷீன் அனைத்து பிரிவுகளில் தினமும் 100க்கும் அதிகமான புதுவிதமான டிசைன்களை தயாரிக்கிறது. இது பலதரப்பட்ட மக்களைத் தொடர்ந்து கவரும் வகையில் குறைவான விலையில் தயாரிக்கப்பட்டு, குறைவான விலை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்கும் காரணத்தால் லாபத்தை தொடர்ந்து அள்ளி வருகிறது.
தேவையின் அடிப்படையில் உற்பத்தி: இதேபோல் சந்தையின் தேவை அடிப்படையில் பொருட்களை மிகவும் சிறப்பாகத் திட்டமிட்டு உற்பத்தி செய்யும் முறையில் இயங்குகிறது ஷீன். இது மாறிவரும் நுகர்வோர் போக்கிற்கு ஏற்ப மாறுவது மட்டும் அல்லாமல், தேவையில்லாமல் சரக்குகளை குவிப்புக்கும் அபாயத்தைக் குறைக்கவும் ஷீனுக்கு உதவுகிறது.
புதுமையான அணுகுமுறையின் வெற்றி: இந்த புதுமையான அணுகுமுறை தான் ஷீன் வெற்றிக்கு அடித்தளம். இதை சீனாவில் மட்டும் அல்லாமல் 150 நாடுகளில் செய்கிறது என்பது ஆச்சரியப்படுத்தும் விஷயம்.

உலகளாவிய சந்தையில் முன்னணி: நைக்கி, எச் & எம், சாரா போன்ற முக்கிய பிராண்டுகளை விட உலகளாவிய சந்தையில் ஷீன் ஈகாமர்ஸ் தளத்திற்கு அதிகமான மக்கள் வருகின்றனர். இதன் மூலம் செப்டம்பர் 2024ல் world's most visited fashion and apparel website என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது.
ஷீன் நிறுவனத்தில் சமீபத்திய நிதி திரட்டல் சுற்றில் 66 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டது. ஷீன் தற்போது லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடும் திட்டத்தில் உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications