சென்னை: ATM என்பது பணத்தை எளிதாகவும் விரைவாகவும் பெறுவதற்கான வசதியான வழி. ஆனால், ATM மோசடிகள் அதிகரித்து வருவதால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை இழக்காமல் இருக்க, ATM பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு குறிப்புகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம்.
கிரெடிட் கார்டுகள், UPI, டிஜிட்டல் வாலட்கள் மற்றும் கிரிப்டோ தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ATM மோசடிகளும் அதிகதிகரித்துள்ளன.

பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்யுங்கள்: நல்ல வெளிச்சம் இருக்கும், பரபரப்பான இடத்தில் உள்ள ATM மையங்களுக்கு சென்று பணம் எடுங்கள். தனிமைப்படுத்தப்பட்ட அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள ஏடிஎம் மையங்களை தவிர்க்கவும்.
சுற்றுப்புறத்தை கவனிக்கவும்: ஏடிஎம் இயந்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை நன்கு கவனிக்கவும். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருந்தால், அந்த ஏடிஎம்மை பயன்படுத்த வேண்டாம்.
உங்கள் கார்டை யாருக்கும் கொடுக்காதீர்கள்: உங்கள் ஏடிஎம் கார்டை யாருக்கும் கொடுக்காதீர்கள். PIN நம்பரை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
PIN நம்பரை மறைத்து என்டர் செய்யவும்: ஏடிஎம் அல்லது POS இயந்திரத்தில் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தும் போது, கீபேடை சரியாக மறைக்க உங்கள் கையைப் பயன்படுத்தவும். யாராவது உங்கள் PIN-ஐ பார்க்க முயற்சிப்பதை நீங்கள் கண்டால், உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்.
பரிவர்த்தனை முடிந்ததும் ரசீதை எடுத்துக்கொள்ளுங்கள்: பரிவர்த்தனை முடிந்ததும் ரசீதை எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், அதை பாதுகாப்பான இடத்தில் வைக்கவும் அல்லது கிழித்து எறியவும்.
ஸ்ட்ராங் பின் நம்பர்: எளிதில் யூகிக்கக்கூடிய பின் நம்பர்களைப் பயன்படுத்த வேண்டாம். உதாரணமாக, உங்களுடைய பிறந்த தேதி பிறந்த வருடம் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.
பதில் அளிக்காதீர்கள்: உங்களுடைய பின் நம்பரை கேட்டு வரும் மெசேஜ்கள், அழைப்புகள் மற்றும் மெயில் போன்றவற்றுக்கு பதில் அளிக்காதீர்கள். எந்த ஒரு வங்கியும் உங்களிடம் இது போன்ற விவரங்களைக் கேட்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஸ்பை கேமராக்கள்: உங்கள் பரிவர்த்தனையைத் தொடங்கும் முன் ஸ்பை கேமராக்களைப் பார்க்கவும். இதை வைத்து நீங்கள் என்டர் செய்யும் பின் நம்பரை தெரிந்து கொண்டு, பின்னர் கார்டு இல்லா பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகின்றனர். எனவே இதை புரிந்து கொண்டு உஷாராக இருங்கள்.
பாதுகாப்பாக பின் நம்பரை என்டர் செய்யவும்: நீங்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்தால், உங்களுக்கு பின்னல் வரிசையில் நிற்பவர், உங்களுடைய பின் நம்பரை பார்க்கிறாரா.. என்று கவனியுங்கள். அப்படி பார்ப்பது போல தோன்றினால் அவரை சற்று தள்ளி நிற்க சொல்லுங்கள். இல்லையேல் அந்த ஏடிஎம்-ஐ பயன்படுத்தாமல் வேறு ஏடிஎம் சென்று பணம் எடுப்பது நல்லது.
உங்கள் மொபைலில் SMS நோட்டிபிகேஷன்களை ஆன் செய்து வையுங்கள். அப்பொழுதுதான் உங்கள் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் போது உங்களுக்கு மெசேஜ் அனுப்பப்படும். நீங்கள் பணம் எடுக்காமல் உங்களுக்கு மெசேஜ் ஏதேனும் வந்தால் உடனடியாக வங்கியில் புகார் அளியுங்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications