துபாய் நகரம் உலகின் மிக முக்கியமான வணிக மையங்களில் ஒன்றாக இருக்கிறது. பலரும் இங்கு வேலை செய்ய, தொழில் நடத்த அல்லது முதலீடு செய்ய வருகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, சில மோசடி நிறுவனங்கள் மக்கள் பணத்தை ஏமாற்றி எடுத்துவிட்டு மாயமாகின்றன. இது போன்ற சம்பவமொன்று தற்போது நடந்திருக்கிறது.
துபாயின் 'பிஸினஸ் பே' என்ற பகுதியில் உள்ள 'Capital Golden Tower' கட்டிடத்தில் 'Gulf First Commercial Brokers' என்ற பெயரில் ஒரு நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் ஒரு மாதம் முன்னர் வரை சுமார் 40 பேர் பணியாற்றும் ஒரு பெரிய நிறுவனம் போல தெரிந்தது. அந்த நிறுவனம் இப்போது முழுவதுமாக காணாமல் போய்விட்டது. அலுவலகங்கள் காலியாகி விட்டன. துடைப்பம், கழிவுத் தொட்டி, குப்பை பைகளைத் தவிர எதுவும் இல்லை. அங்கே பணிபுரிந்தவர்கள் எல்லோரும் காணாமல் போனதாகவும், தொலைபேசி எண்கள் வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

அந்தக் கட்டிடத்தின் பாதுகாவலர் கூறுகையில், அவர்கள் திடீரென்று கிளம்பிவிட்டார்கள். சாவிகளை கொடுத்து விட்டார்கள். அவர்கள் சென்றதற்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் யாராவது வந்து அவர்களைப் பற்றி கேட்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைச் சேமிப்பை நம்பிக்கையுடன் கொடுத்தனர். ஆனால், இப்போது அவர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். கேரளாவைச் சேர்ந்த முஹம்மது மற்றும் ஃபயாஸ் ஆகியோர் இந்த நிறுவனத்தில் 75,000 டாலர் (சுமார் ரூ. 62 லட்சம்) முதலீடு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஃபயாஸ் கூறுகையில், நான் நேரிலேயே அலுவலகத்திற்க்கு சென்றேன். ஆனால் அங்கே யாரும் இல்லை. எங்கள் மேலாளர்களின் எண்கள் வேலை செய்யவில்லை. இது நிஜமாகவே நடந்தது என்று நம்பவே முடியவில்லை என்று கூறினார். அவரது மேலாளர் முதல் 1,000 டாலர் முதலீடு செய்யச் சொன்னார். சிறிய லாபங்களை கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தினார். பின்னர், அதிகமாக பணம் கொடுக்க அழுத்தம் கொடுத்தார்.
மற்றொரு முதலீட்டாளர் கூறுகையில், நான் 230,000 டாலர் (சுமார் ரூ.1.9 கோடி) இழந்தேன். அந்த மேலாளர் என் தாய்மொழியான கன்னடத்தில் பேசினார். அதனால் எனக்கு நம்பிக்கை வந்தது. ஆரம்பத்தில் லாபம் வந்தது போல காட்டினார்கள். சிறிது பணமும் திரும்ப வந்தது. ஆனால் பின்னர், பணத்தை எடுக்க முடியவில்லை. மேலும் பணம் சேர்க்க சொன்னார்கள் என்று கூறினார்.
முதலீட்டாளர்கள் கூறியதுபோல், Gulf First Commercial Brokers, மற்றொரு நிறுவனமான Sigma-One Capital என்ற ஆன்லைன் தளத்தின் மூலம் முதலீடு செய்ய சொன்னது. இந்த தளம் துபாய் அரசு அல்லது பொருளாதார மன்றத்தின் அனுமதி இல்லாமல் செயல்பட்டது. இந்திய முதலீட்டாளர் சஞ்சீவ் கூறுகையில், அவர்கள் என்னிடம் பாதுகாப்பான வருமானம் என்று கூறினார்கள். ஆனால் நான் என் வாழ்க்கை சேமிப்பை இழந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். Gulf First மற்றும் Sigma-One என்ற பெயர்களை ஒரே நிறுவனமாகக் கூறினார்கள். நாங்கள் ஒன்றாகவே நம்பினோம் என்று அனைவரும் வருத்தத்துடன் கூறினார்கள்.
துபாய் போலீசார் தற்போது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், "Sigma-One Capital என்ற ஆன்லைன் தளத்திற்கு எந்த சட்டபூர்வ அனுமதியும் இல்லை. அவர்கள் மக்களுக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து பணம் எடுத்து மோசடி செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
மேலும் ஒரு முதலீட்டாளர் வருத்தத்துடன் கூறுகையில், நான் முதலீடு செய்வதற்கு முன்னர் சரியாக சோதித்திருக்க வேண்டும். இப்போது என் பணம் போய்விட்டது. என் கனவுகளும் உடைந்துவிட்டன என கூறினார். இந்த சம்பவம் எல்லா சாதாரண மக்களுக்கும் ஒரு பெரிய பாடமாக இருக்கிறது. வேலைக்காக அல்லது வருமானத்துக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் எளிய மக்கள், அவ்வப்போது வந்த அழைப்புகள், இனிமையாகப் பேசும் மேலாளர்கள், ஆரம்பத்தில் கொடுக்கும் சிறிய லாபம் என்று நம்பி, பெரிய அளவில் ஏமாறுகிறார்கள்.
துபாயில் நடந்த இந்த சம்பவம், நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி எளிய மக்களை ஏமாற்றும் மோசடி நிறுவனங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை நிரூபிக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மக்களை பாதித்துள்ள இந்த மோசடி, இன்னும் விசாரணையில் உள்ளது. இது போன்ற ஏமாற்றுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். நம்முடைய பணம் நம்முடைய பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
More From GoodReturns

துபாயில் சிக்கிதவிக்கும் பிரலங்கள்.. அமைச்சர் முதல் அஜித் குமார், நர்கிஸ் ஃபக்ரி வரை.. பெரிய லிஸ்ட் இருக்கு

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications