அட்சய திருதியை பண்டிகைக்கு ஒரு நாளே இருக்கும் சூழலில் சென்னையில் தடாலடியாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்து பொதுமக்கள் முகத்தில் புன்னகையை வரவழைத்து இருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக விலை கூடி வந்த தங்கம் இன்றைய தினம் குறைந்து இருக்கிறது.
இந்தியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வழக்கமாக தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும், எனவே டிமாண்ட் அதிகரித்து தங்கத்தின் விலை உயரும். கடந்த மூன்று நாட்களாக கூட இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வில் தான் இருந்து வந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் திங்கட்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை சரிவடைந்து 14, 060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்து 14,220 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. புதன் கிழமை ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் விலை உயர்ந்து 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே வேளையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்தது. சென்னையில் நேற்று தங்கம் ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
திங்கள் தவிர்த்து மூன்று நாட்கள் விலை உயர்ந்த நிலையில், அட்சய திருதியை நாளில் தங்கம் விலை இன்னும் உயருமா என ஏராளமான மக்கள் குழம்பிப் போயினர். இந்த சூழலில் தான் இன்றைய தினம் தங்கத்தின் விலை சரிந்து மக்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறது. நேற்றைய தினம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்றைய தினம் கிராமுக்கு 150 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,210 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,14,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் 1,13,680 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதாவது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1200 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக விலை ஏறி வந்த தங்கம் இன்று ஒரே நாளில் கணிசமான அளவு விலை குறைந்து இருப்பது மக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது.
நாளை மறுதினம் அட்சய திருதியை வர கூடிய சூழலில் மேற்கொண்டு நாளையும் நாளை மறுநாளும் தங்கம் விலை குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது நிச்சயம். வெள்ளியை பொறுத்தவரை இன்றைய தினம் எந்த ஒரு விலை மாற்றமும் இல்லை ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.75 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications