Gold Rate: ஷாக் கொடுத்த தங்கம் விலை!! சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை ஒரு நாள் ஏறுவது, ஒரு நாள் இறங்குவது என மாறி மாறி இருக்கிறது. இதனால் நகை வாங்க வேண்டியவர்களும், முதலீடு செய்வோரும் இப்போது தங்கம் வாங்கலாமா, தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) நேற்றைய விலையை விட அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,870 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,18,960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (மே 18) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ.14,750 என்ற அளவில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. அதே போல ஒரு சவரனுக்கு 960 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை மாறாமல் இருந்த தங்கம் விலை இன்று ஒரே அடியாக உயர்வு கண்டுள்ளது.

Gold Rate: ஷாக் கொடுத்த தங்கம் விலை!! சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை என்ன?

இதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலையை பார்க்கும்போது, இன்று ஒரு கிராமுக்கு ரூ.131 உயர்ந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.16,221 க்கும், 10 கிராம் தங்கம் ரூ.1,62,210 க்கும் விற்பனையாகிறது. அடுத்ததாக 18 கேரட் தங்கத்தின் விலையும் இன்று ஒரு கிராமுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.12,409 ஆகவும், 8 கிராமுக்கு ரூ.99,272 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read

வெள்ளி விலையில் மாற்றமில்லை , ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அண்மைக்காலமாக தங்கம் , வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கம் அடைவதற்கு முக்கியக் காரணங்கள் பல உள்ளன. முதலாவதாக, அமெரிக்கா -ஈரான் போர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஆகியவை முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கித் திருப்பியுள்ளன.

Recommended For You

இரண்டாவதாக, பணவீக்கத்திற்கு எதிரான மிகச்சிறந்த அரணாக தங்கம் கருதப்படுவதாலும், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தைத் தொடர்ந்து அதிகளவில் வாங்குவதாலும் சர்வதேச சந்தை தேவை அதிகரித்து விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்தியாவில் அண்மையில் தான் மத்திய அரசு தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6%இல் இருந்து 15%ஆக உயர்த்தியது. இதுவும் தங்கம் விலை உயர காரணமாகும். ஈரான் போர் தொடர்பான நிகழ்வுகளும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களும் தான் இனி வரும் நாட்களில் தங்கம் விலையின் போக்கை தீர்மானிக்க போகின்றன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+