தங்க நகை விற்பனையில் இப்படியொரு விஷயம் நடக்குதா.. ஷாக்கான மத்திய அரசு..!

தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கும் போது எப்படி கடத்தல் அதிகரித்து வருகிறதோ, இதேபோல் அதிகப்படியான தங்கம் விலை, வரி சுமை ஆகியவற்றின் காரணமாக மக்களும், நகை கடைகளும் மறைமுக வர்த்தகத்தை கையில் எடுத்துள்ளனர்.

அதாவது நகை கடைகள் கணக்கில் காட்டாமல், பில் இல்லாமல் நகைகளை அதிகளவில் மக்களுக்கு விற்று வருவது வரித்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இதனால் என்ன லாபம் என நீங்கள் கேட்கலாம், பில் இல்லாமல் தங்க நகை வாங்கும் போது மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து விலையில் தள்ளுபடி + ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாத காரணத்தால் சுமார் 6 சதவீதம் வரையிலான லாபம் கிடைப்பதாக தகவல் வெளியாகிறது.

 தங்க நகை விற்பனையில் இப்படியொரு விஷயம் நடக்குதா.. ஷாக்கான மத்திய அரசு..!

அடுத்த முக்கியமான விஷயமாக இத்தகைய மறைமுக வர்த்தகத்தில் அதிகளவில் ரொக்க பணம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் மத்திய அரசு நாட்டின் அன்னிய செலாவணியை சேமிக்கும் நோக்குடன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான மொத்த இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இதனால் தங்கம் விலை ரீடைல் சந்தையில் பெரிய அளவில் உயர்ந்தது, இதோடு தங்க நகை வாங்கும் 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. தங்கம் விலை குறைந்தால் உடனே நகை கடைக்கு செல்லும் மக்கள் மத்தியில் மறைமுக வர்த்தகத்தில் 100000 ரூபாய் நகைக்கு 6000 ரூபாய் சேமிப்பு கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன..?

மத்திய அரசு இறக்குமதி வரியை அதிகரித்த பின்பு மறைமுக வர்த்தகம் பெரியளவில் அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 32 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை வாங்குகிறோம், இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியது.

குறிப்பாக தங்கம் விலை உயர்ந்துள்ளதால் தங்கத்திற்கான இறக்குமதி செலவுகளும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. வரி உயர்வின் பின்விளைவுகளாக இந்த மறைமுக வர்த்தகம் மத்திய அரசுக்கு பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை.

செப்டம்பர் மாதம் சர்வதேசச் சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை 7.04 சதவீதம் சரிந்து தற்போது 4145 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இந்திய சந்தையில் 24 கேரட் தங்கம் விலை இந்த 29 நாட்களில் தங்கம் விலை 5,840 ரூபாய் குறைத்தது மட்டும் அல்லாமல் 3.78 சதவீதம் சரிவைப் பதிவு செய்துள்ளது. மேலும் கோல்டு ஈடிஎப் விலை இந்த மாதத்தில் 6 சதவீதமும், வெள்ளி ஈடிஎப் 7 சதவீதமும் சரிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+