அய்யயோ! மோசடிக்கு சீனாவில் பயன்படுத்தப்படும் கேரள சிம் கார்டுகள்.. இன்னும் என்னவெல்லாம் நடக்கபோகுதோ!

திருவனந்தபுரம்: நம் நாட்டில் ஆன்லைன் மோசடிகள் நடந்து கொண்டே தான் உள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த மோசடியால் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்போது சீன கும்பலுடன் சேர்ந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைப் பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

வெளிநாட்டு கால் சென்டர்கள் மூலம் சைபர் மோசடியில் ஈடுபடும் சீன நிறுவனத்திற்க்கு, கேரளாவில் செயல்படும் ஒரு குழு சிம் கார்டுகளை சப்ளை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டள்ளது. இந்த சிம் கார்டுகளின் மூலம் போலி ஐடிகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்தக் குழுவை குறி வைத்து மத்திய மற்றும் மாநில அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன. இதன் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அய்யயோ! மோசடிக்கு சீனாவில் பயன்படுத்தப்படும் கேரள சிம் கார்டுகள்.. இன்னும் என்னவெல்லாம் நடக்கபோகுதோ!

இந்த மோசடியின் மூலம், கேரளாவை சேர்ந்த எண்களில் இருந்து மக்களுக்கு அழைப்புகளை மேற்கொள்வது, செய்திகளை அனுப்புவது, சமூக ஊடகங்களின் வழியாக நட்பாக பழகுவது மற்றும் பங்கு சந்தையில் பங்கேற்பதற்கு மக்களை வலியுறுத்துவது போன்ற செயல்களை செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். இதன் மூலம் மக்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பணத்தைத் திருடும் வகையில் இந்த மோசடிகள் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மலையாளி போல தோன்றினாலும், அவர்கள் இந்தியாவில் இருப்பதில்லை. இந்த அழைப்புகள் கம்போடியா, மியான்மர் மற்றும் லாவோஸை தளமாகக் கொண்ட சீனக் குழுக்களால் இயக்கப்படும் கால் சென்டர்களிலிருந்து மக்களுக்கு வருகின்றன. கூடுதலாக கேரளாவில் இந்த மோசடி நடவடிக்கைகளில் பணிபுரியும் மலையாளிகளுக்கு சிம்கார்டுகளை வழங்குவதற்கு ஒரு பெரிய நெட்வொர்க் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

கேரள காவல்துறையினரால் இதுவரை நடத்தப்பட்ட சைபர் பிரிவு தொடர்பான விசாரணைகளில் ரூ.3.5 லட்சம் மேல் ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது என புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாலா ஸ்டேஷனில் மோசடி தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், சிம் கார்டுகளை விற்பனை செய்யும் விஷ்ணு என்பவருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் விஷ்ணுவை காவலில் வைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் சீன குழுவுடன் தொடர்புடைய முஃப்லிக் என்ற நபருக்கு போலி முகவரியில் சிம் கார்டுகளை தந்ததாக விஷ்ணு தெரிவித்துள்ளார்.

முழுவதும் விசாரிக்கப்பட்ட பிறகு முஃப்லிக் 500-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கியாதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் தங்கி இருந்து, விஷ்ணு வழங்கிய OTP-களைப் பயன்படுத்தி முஃப்லிக் இந்த சிம் கார்டுகளின் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் விசாரணை செய்த பொழுது, அந்த சீன கும்பல் பற்றிய முக்கியமான தகவல்கள் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சீன குழுவிற்காக வேலை செய்து பலரை ஏமாற்றி உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை விஷ்ணு மற்றும் முப்லிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இவர்களே முக்கிய குற்றவாளிகள் என்று கருதப்படுகிறது. இந்த மோசடியில் ஈடுபடும் அனைவரையும் கூடிய விரைவில் பிடிப்போம் என்று காவல்துறை கூறியுள்ளது.

நம் நாட்டில் இருந்து கொண்டே பிற நாட்டவர்க்கு, நம்முடைய விவரங்களை விற்க முயற்சிக்கும் இதுபோன்ற நபர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+