தங்கம், வெள்ளி-யில் அந்தர் பல்டி..!! இதெல்லாம் நடக்கும்னு கனவுல கூட எதிர்பார்க்கல..!

இந்திய முதலீட்டாளர்களிடையே ஜனவரி மாதத்தில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. முதல் முறையாக தங்கம் மற்றும் வெள்ளி ETF-களில் (Exchange Traded Funds) குவிந்த முதலீட்டு தொகை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களை விட அதிகமாக உள்ளது. இது இயல்பான போக்கு கிடையாது. பொதுவாக பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் தான் அதிகமாக முதலீடு குவியும்.

ஜனவரி மாதத்தில் என்ன நடந்தது?

தங்கம், வெள்ளி-யில் அந்தர் பல்டி..!! இதெல்லாம் நடக்கும்னு கனவுல கூட எதிர்பார்க்கல..!

தங்கம் மற்றும் வெள்ளி ETF-களில் ஜனவரி மாதம் மொத்தம் ரூ.33,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் ரூ.24,029 கோடி மட்டுமே வந்துள்ளது. இதனால் தங்கம்-வெள்ளி பண்டுகள் முதல் முறையாக ஈக்விட்டி பண்டு முதலீடுகளை காட்டிலும் அதிகமாக குவிந்துள்ளது.

முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் இதில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது தெளிவாக தெரிகிறது. டிசம்பரில் ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகளில் ரூ.28,055 கோடி முதலீடு குவிந்த போது, தங்கம்-வெள்ளி ETF-களில் ரூ.15,609 கோடி அளவிலான முதலீடு மட்டுமே வந்திருந்தது. ஜனவரி மாதம் இது தலைகீழாக மாறியுள்ளது.

தங்கம் vs வெள்ளி முதலீடு
தங்க ETF-களில் மட்டும் ரூ.24,039 கோடி முதலீடு. வெள்ளி ETF-களில் ரூ.9,463 கோடி. தற்போது தங்க ETF-களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1.81 லட்சம் கோடி. வெள்ளி ETF-களின் மதிப்பு ரூ.1.14 லட்சம் கோடி. இதன் மூலம் தங்கம்-வெள்ளி இனி சிறிய முதலீட்டு பிரிவாக பார்க்கப்படாது.

ஏன் திடீரென தங்கம்-வெள்ளி நோக்கி முதலீடு அதிகரித்தது?
பங்குச் சந்தையில் அதிகளவிலான ஏற்ற இறக்கமாக இருந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் ஆபத்தை தவிர்க்க விரும்பி தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான சொத்துகளில் முதலீட்டை அதிகரிக்க செய்தனர். உலக அளவில் போர், புவிசார் அரசியல் பதற்றம், பொருளாதார நிச்சயமின்மை போன்றவை அதிகரித்த காரணத்தால் தங்கம், வெள்ளிக்கான தேவை அதிகரித்தது.

இக்காலக்கட்டத்தில் அமெரிக்க டாலர் பலவீனமடைந்ததும் தங்கம், வெள்ளி மீதான முதலீடு உயர முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைத்தது, மேலும் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து சாதனை உச்சங்களை எட்டியதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தது.

இத்தகைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி மீதான முதலீட்டை அதிகரிக்க எளிய வழியாக இருந்தது ETF.

பங்கு மியூச்சுவல் ஃபண்ட்களில் என்ன நடந்தது?
ஈக்விட்டி பண்டுகளில் குவியும் முதலீட்டு அளவு இரண்டாவது மாதமாக குறைந்துள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் கவனமாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்தனர். பல ஆபத்து நிறைந்த பங்குகளை விற்பனை செய்தனர்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் வந்த ரூ.24,029 கோடி முதலீட்டில், ஃப்ளெக்ஸி-கேப் பண்டுகளில் ரூ.7,700 கோடி, மிட்-கேப் பண்டுகளில் ரூ.3,200 கோடி, லார்ஜ் & மிட்-கேப் பண்டுகளில் ரூ.3,200 கோடி வந்துள்ளது. இது ரிஸ்க் கட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டு போக்கை காட்டுகிறது. மல்டி-அசெட் பண்டுகளில் (பங்கு, தங்கம், கடன் கலந்தவை) தொடர்ந்து நிலையான வரவைப் பெற்றன. சில்லறை முதலீட்டாளர்கள் தொடர்ந்து SIP மூலம் முதலீடு செய்து வருகின்றனர்.

இந்தியா-அமெரிக்கா, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பேச்சுவார்த்தைகள் போன்ற நல்ல சமிக்ஞைகள் நம்பிக்கையை அதிகரித்த காரணத்தால் பிப்ரவரி மாதத்தில் முதலீட்டு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், நீண்டகால முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+