பங்குச் சந்தைகள் தற்போது கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் தற்போது பங்குகளில் முதலீடு செய்ய மிகவும் தயக்கம் காட்டுகின்றனர். சரி தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றால், தற்போது தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இதனால் இப்பம் தங்கம் மற்றும் தங்க இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்வது சரியாக இருக்குமா என்று முதலீட்டாளர்கள் ஒரு முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தங்கம் மற்றும் தங்க இடிஎஃப் திட்டங்களில் அளவுக்கு மீறி முதலீடு செய்தால் உங்களுக்கே ஆபத்தாக வாய்ப்புள்ளது என்று முதலீட்டாளர்களுக்கு பிரபல சந்தை நிபுணர் ஒருவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆனந்த் ரதி வெல்த் லிமிடெட் நிறுவனத்தின் மியூச்சுவல் பண்ட்ஸின் தலைவர் ஸ்வேதா ரஜனி கூறுகையில், தங்க பத்திரம் திட்டம் நிறுத்தப்பட்டதால், முதலீட்டாளர்கள் தங்க இடிஎஃப்களை ஆபத்து இல்லாத முதலீடாக மாற்றியுள்ளனர். இது தங்கத்தின் விலை உயர்வுடன் சேர்ந்து தேவையை மேலும் தூண்டியுள்ளது, தங்கத்தை ஒரு முக்கிய முதலீட்டு தேர்வாக மாற்றியுள்ளது.
கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்களில் தங்கத்தின் வருவாய் முறையே மைனஸ் 3.20 சதவீதம், மைனஸ் 0.38 சதவீதம் மற்றும் 7.23 சதவீதம் ஆகும். வருமானமும் வரத்தும் நேரடியாக தொடர்புடையவை. இது மக்கள் கடந்த கால செயல்திறனை வாங்கும் போக்கை காட்டுகிறது.
அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளில் தங்கம் வாயிலான வருமானம் பரவலாக ஏற்ற இறக்கங்களை உள்ளடக்கியுள்ளது. சமீபத்திய சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் தேவை அதிகரிப்பின் காரணமாக தற்போது தங்கத்தின் விலை கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த கணிக்க முடியாத தன்மையை கடந்த 25 ஆண்டுகளில் நிலையான வருமானத்தை காட்டிய நிப்டியுடன் ஒப்பிடுகையில், முதலீட்டுக்கான குறைந்த நம்பகமான சொத்து பிரிவாக தங்கம் உள்ளது.
தங்கத்தின் இந்த நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு, தங்கத்தை அதிகமாக நம்பி கூடுதலாக முதலீடு செய்தால் அது உங்கள் போர்ட்போலியோவின் உறுதியற்றத்தன்மைக்கு வழிவகுக்கும். எனவே ஆபத்தை குறைக்கும் மற்றும் பல்வகைப்படுத்தலை பராமரிக்க ஒட்டு மொத்த போர்ட்போலியாவில் தங்கத்துக்கான உங்கள் முதலீட்டை அதிகபட்சமாக 5-10 சதவீதத்துக்குள் வைத்திருப்பது நல்லது என்று ரஜனி தெரிவித்தார்.
இந்திய மியூச்சுவல் பண்ட்ஸ் சங்கத்தின் தரவுகளின்படி, 2025 ஜனவரியில் தங்க இடிஎஃப்களில் நிகர முதலீடு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.3.751.4 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முன் கடந்த அக்டோபரில் தங்க இடிஎஃப்களில் ரூ.1,961.57 கோடி நிகர முதலீடு மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
கடந்த ஜனவரி நிலவரப்படி, தங்க இடிஎஃப்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 16.24 அதிகரித்து ரூ.51,839.39 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய டிசம்பர் மாதத்தில் ரூ.44,595 கோடியாக இருந்தது. 2024 ஜனவரியுடன் ஒப்பிடுகையில், தங்க இடிஎஃப்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 87 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications