பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் லாபகரமான வருமானத்தை அளிக்கும் ஒரு முக்கிய சொத்தாகத் தங்கம் உருவெடுத்துள்ளது. இதனாலேயே தங்கம் விலை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளியும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த குறைவான கவனத்தையே பெற்றுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில், தங்கத்தின் விலை 40% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் வெள்ளியின் விலை கிட்டத்தட்ட 34% உயர்ந்துள்ளது. இதன் மூலம் இரண்டு உலோகங்களும் 2025 ஆம் ஆண்டில் சிறந்த வருமானம் அளிக்கும் சொத்துக்களாக உள்ளது. சரி அடுத்த 5,10, 15 வருடத்திற்கு லாபம் பார்க்கத் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா..? வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டுமா..? என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும் இதற்கான பதிலைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
தற்போது, சர்வதேசச் சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 33 டாலராக ஆக உள்ளது, அதே நேரத்தில் இந்தியாவில் ஸ்பாட் சந்தையின் விலை ஒரு கிலோவுக்கு 1 லட்சத்தை நெருங்குகிறது. தங்கத்தின் விலை சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் 3,030 டாலராகவும், இந்தியாவில் 10 கிராம் 88,500 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் தங்க வர்த்தக சந்தையை ஒப்பிடுகையில் வெள்ளியின் சந்தை சிறியது, ஆண்டுக்கு சுமார் 30 பில்லியன் டாலர் விற்றுமுதல் கொண்டது தான் வெள்ளி சந்தை. இதனால், விநியோகத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட விலையில் பெரிய ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, இதனாலேயே பெரும் முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள்.
ஆனால் இதெல்லாம் பழைய கதை, வெள்ளி தற்போது தொழில்துறை துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக கிரீன் தொழில்நுட்ப துறையில் வெள்ளியின் தேவை அதிகரித்து வருவதுடன், சந்தையில் வெள்ளிக்கான டிமாண்ட் சற்று அதிகமாகவே உள்ளது. ஆனால் வெள்ளியின் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகள் உள்ளது, இதைக் களைத்தால் வெள்ளி சந்தைக்கு வருவதும் அதிகரிக்கும்.
இந்த நிலையில் வெள்ளியின் விலை உயருமா என்பதைக் கணக்கிடுவதற்கு முதலீட்டாளர்கள் தங்கம்-வெள்ளி விகிதத்தை (Gold-Silver Ratio) கண்காணிப்பது அவசியம். தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளுக்கு இடையிலான உறவைத் தான் இந்த விகிதம் மதிப்பிடுகிறது.
உதாரணமாக 1980 களின் பிற்பகுதியில் Gold-Silver Ratio 70:1 ஆக இருந்த நிலையில், தற்போதைய விலை நிலவரத்தில் 91:1 ஐ நெருங்குகிறது. அதாவது 3030 டாலர் : 33 டாலர். இந்த விகிதத்தை அதன் வரலாற்றுச் சராசரி அளவான 70:1 க்கு வர வேண்டுமென்றால், வெள்ளியின் விலை பெரிய அளவில் உயர வேண்டும். அப்படியானால் வெள்ளி தற்போது இருக்கும் 1 லட்சம் அளவிலிருந்து பெரிய அளவுக்கு உயரும் வாய்ப்பை கொண்டுள்ளது.
இதனால் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் அடுத்த 5, 10 அல்லது 15 ஆண்டுகள் போன்ற நீண்ட கால முதலீட்டு போர்ட்ஃபோலியோவுக்கு சிறப்பான முதலீடாகத் திகழ்கிறது. சரி இந்த வார முடிவில் தங்கம் விலை எப்படி இருந்தது..?
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 65840 ரூபாய், மும்பை - 65840 ரூபாய், டெல்லி - 65960 ரூபாய், கொல்கத்தா - 65840 ரூபாய், பெங்களூர் - 65840 ரூபாய், ஹைதராபாத் - 65840 ரூபாய், கேரளா - 65840 ரூபாய், புனே - 65840 ரூபாய், பரோடா - 65880 ரூபாய், அகமதாபாத் - 65880 ரூபாய், ஜெய்ப்பூர் - 65960 ரூபாய், லக்னோ - 65960 ரூபாய், கோயம்புத்தூர் - 65840 ரூபாய், மதுரை - 65840 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,230 ரூபாய், மும்பை - 8,230 ரூபாய், டெல்லி - 8,245 ரூபாய், கொல்கத்தா - 8,230 ரூபாய், பெங்களூர் - 8,230 ரூபாய், ஹைதராபாத் - 8,230 ரூபாய், கேரளா - 8,230 ரூபாய், புனே - 8,230 ரூபாய், பரோடா - 8,235 ரூபாய், அகமதாபாத் - 8,235 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,245 ரூபாய், லக்னோ - 8,245 ரூபாய், கோயம்புத்தூர் - 8,230 ரூபாய், மதுரை - 8,230 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,978 ரூபாய், மும்பை - 8,978 ரூபாய், டெல்லி - 8,998 ரூபாய், கொல்கத்தா - 8,978 ரூபாய், பெங்களூர் - 8,978 ரூபாய், ஹைதராபாத் - 8,978 ரூபாய், கேரளா - 8,978 ரூபாய், புனே - 8,978 ரூபாய், பரோடா - 8,988 ரூபாய், அகமதாபாத் - 8,988 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,998 ரூபாய், லக்னோ - 8,998 ரூபாய், கோயம்புத்தூர் - 8,978 ரூபாய், மதுரை - 8,978 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,795 ரூபாய், மும்பை - 6,734 ரூபாய், டெல்லி - 6,746 ரூபாய், கொல்கத்தா - 6,734 ரூபாய், பெங்களூர் - 6,734 ரூபாய், ஹைதராபாத் - 6,734 ரூபாய், கேரளா - 6,734 ரூபாய், புனே - 6,734 ரூபாய், பரோடா - 6,738 ரூபாய், அகமதாபாத் - 6,738 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,746 ரூபாய், லக்னோ - 6,746 ரூபாய், கோயம்புத்தூர் - 6,795 ரூபாய், மதுரை - 6,795 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,030 ரூபாய்,
மும்பை - 27,030 ரூபாய், டெல்லி - 27,030 ரூபாய், கொல்கத்தா - 27,030 ரூபாய், பெங்களூர் - 27,030 ரூபாய், ஹைதராபாத் - 27,030 ரூபாய், கேரளா - 27,030 ரூபாய், புனே - 27,030 ரூபாய், வதோதரா - 27,030 ரூபாய்,அகமதாபாத் - 27,030 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,10,000 ரூபாய், மும்பை - 1,01,000 ரூபாய், டெல்லி - 1,01,000 ரூபாய், கொல்கத்தா - 1,01,000 ரூபாய், பெங்களூர் - 1,01,000 ரூபாய், ஹைதராபாத் - 1,10,000 ரூபாய், கேரளா - 1,10,000 ரூபாய், புனே - 1,01,000 ரூபாய், பரோடா - 1,01,000 ரூபாய், அகமதாபாத் - 1,01,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,01,000 ரூபாய், லக்னோ - 1,01,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,10,000 ரூபாய், மதுரை - 1,10,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 34.90 - 7,960 ரூபாய்
குவைத் - KWD 27.72 - 7,736 ரூபாய்
மலேசியா - MYR 425 - 8,266 ரூபாய்
ஓமன் - OMR 35.90 - 8,020 ரூபாய்
கத்தார் - QAR 341 - 8,044 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 345 - 7,910 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 125.80 - 8,096 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 337.50 - 7,901 ரூபாய்
அமெரிக்கா - USD 91.50 - 7,868 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 337.50 - 7,901 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 337.50 - 7,901 ரூபாய்
துபாய் (UAE) - AED 337.50 - 7,901 ரூபாய்
புஜைரா (UAE) - AED 337.50 - 7,901 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 337.50 - 7,901 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 337.50 - 7,901 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 341 - 8,044 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 35.90 - 8,020 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 345 - 7,910 ரூபாய்
இங்கிலாந்து - GBP 69.14 - 7,679 ரூபாய்
கனடா - CAD 135.75 - 8,132 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 150.30 - 8,107 ரூபாய்
நேபாளம் - NPR 13,732.40 - 8,589 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 37.20 - 8,485 ரூபாய்
குவைத் - KWD 30.23 - 8,436 ரூபாய்
மலேசியா - MYR 440 - 8,558 ரூபாய்
ஓமன் - OMR 38.30 - 8,556 ரூபாய்
கத்தார் - QAR 365.50 - 8,622 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 373 - 8,552 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 138.50 - 8,913 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 364.50 - 8,534 ரூபாய்
அமெரிக்கா - USD 97.25 - 8,363 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 364.50 - 8,534 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 364.50 - 8,534 ரூபாய்
துபாய் (UAE) - AED 364.50 - 8,534 ரூபாய்
புஜைரா (UAE) - AED 364.50 - 8,534 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 364.50 - 8,534 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 364.50 - 8,534 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 365.50 - 8,622 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.30 - 8,556 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 373 - 8,552 ரூபாய்
இங்கிலாந்து - GBP 75.43 - 8,378 ரூபாய்
கனடா - CAD 143.25 - 8,581 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 164 - 8,846 ரூபாய்
நேபாளம் - NPR 14,926.52 - 9,336 ரூபாய்
More From GoodReturns

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications