மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிகப்பிரிவில் சில்வர் லேக் நிறுவனம் 7,500 கோடி ரூபாயினை முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், சில்வர் லேக் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் 1.75% பங்குகளை, 7,500 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் ஈ காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக இந்தியா நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் கால்பதித்து வருகிறது. ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வந்தாலும், ஆன்லைன் வர்த்தகத்தில் சமீபத்தில் தான் ஜியோமார்ட் என்ற பெயரில் களமிறங்கியது ரிலையன்ஸ். சில்லறை வர்த்தகத்தில் நாடு முழுவதும் 12,0000 மேற்பட்ட சில்லறை கடைகள் ரிலையன்ஸூக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை விரிவுபடுத்தும் விதமாக அண்மையில் பிக்பஜார் கடைகளையும் ரிலையன்ஸ் வாங்கியது. இந்த நிலையில் தனது ஜியோமார்ட் வணிகத்தினை மேம்படுத்தும் பொருட்டு சர்வதேச முதலீட்டாளர்களை ரிலையன்ஸ் நிறுவனம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சில்வர் லேக் நிறுவனம், ரிலையன்ஸ் ரீடெயிலில் நிறுவனத்தில் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
சிலவர் லேக் நிறுவனம் ஏற்கெனவே ரிலையன்ஸ் ஜியோவில் 2.08% பங்குகளை, 1.34 பில்லியன் டாலர் முதலீடு செய்து வாங்கியது. இது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ள சில்வர்லேக் நிறுவனத்தின் இணை சிஇஓ ஏகோன் துர்பன் (Egon durban), ரிலையன்ஸின் புதிய வர்த்தக யுக்தி சில்லறை வர்த்தகத்தில் ஒரு புரட்சியை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதே இதுகுறித்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவிக்கையில், சில்வர் லேக் உடனான உறவு நீடிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சில்லறை வணிகத்தில் அதன் முதலீட்டால் முக்கியத்துவம் வாய்ந்த பங்குதாரராக சில்வர் லேக் உருவாகி உள்ளதாகவும் அம்பானி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக பேஸ்புக் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட நிறுவனங்கள் ரிலையன்ஸின் ஜியோவில் முதலீடு செய்தன. இந்த நிலையில் தற்போது சில்லறை வர்த்தகத்தினை மேம்படுத்த ரிலையன்ஸ் முயன்று வருவது, அமேசான் பிளிப்கார்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரும் போட்டியாக உருவெடுக்கவும் இது வழிவகுக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications