இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் மற்றும் என்பிஎப்சி-கள் வழங்கும் தங்க நகை கடன்களை சீரமைக்கும் முக்கியமான வழிக்காட்டுதல்களை வழங்கியது. இந்த வழிக்காட்டுதல்கள் சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் மத்தியில் இதற்கு கடுமையான எதிர்ப்பு உருவானது. இதேவேளையில் ஆர்பிஐ வெளியிட்ட முக்கியமான அறிவிப்பை பலரும் கவனிக்க மறந்துவிட்டனர்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுவது போல வெள்ளியை அடமானமாக வைத்து கடன் பெற வழிக்காட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

வெள்ளி விலை 110000 ரூபாய் என்ற அளவீட்டை பல வாரங்களாக நிலை நிறுத்தியிருக்கும் வேளையில் தங்கம் மற்றும் வெள்ளி மத்தியிலான விலை வித்தியாசம் வராலாறு காணாத வகையில் அதிகமாக இருக்கும் வேளையில் வெள்ளி விலை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. இத்தகைய முக்கியமான சூழ்நிலையில் ஆர்பிஐ வெள்ளி மீதான கடனுக்கு கதவுகளை திறக்க முடிவு செய்துள்ளது.
ஆர்பிஐ ஏப்ரல் 2025-ல் வங்கிகள் மற்றும் NBFC தங்கம் மற்றும் வெள்ளி அடமானக் கடன்களுக்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சி, தங்கக் கடன்களுக்கு ஏற்கனவே உள்ள முறையான கட்டமைப்பை வெள்ளிக்கும் விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்பிஐ மக்கள் மற்றும் வங்கி அமைப்புகளிடம் ஆலோசனை செய்து உரிய முடிவுகளை எடுக்கும்.
RBI-யின் வரைவு வழிகாட்டுதல்களின்படி, வெள்ளி நகைகள், ஆபரணங்கள் மற்றும் குறைந்தபட்சம் 925 தூய்மை கொண்ட வெள்ளி நாணயங்கள், வெள்ளி கட்டிகள், வெள்ளி பார்கள் மீது அடமானமாக வைத்து கடன் பெறலாம். இருப்பினும், வெள்ளி கட்டிகள், பத்திரங்கள், அல்லது வெள்ளி ETF-கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு கடன் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தங்கக் கடன்களுக்கு 75% வரை கடன்-மதிப்பு விகிதம் (LTV) அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் வெள்ளிக்கு இந்த விகிதம் இன்னும் தெளிவாகவில்லை. தங்கக் கடன்களுக்கான கட்டுப்பாடுகள் வெள்ளிக்கும் பொருந்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளியின் விலை சமீப காலங்களில் வேகமாக உயர்ந்து, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய எலக்ட்ரானிக்ஸ், சோலார் பேனல்கள், மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மேலும் வெள்ளி உற்பத்தி தேவைக்கு ஈடாக இல்லை, சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் அளவு குறைந்து வருகிறது. இதனால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை அதிகரித்து வெள்ளி விலை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதற்கிடையில் பணவீக்கம் அல்லது பொருளாதார நெருக்கடிகளின் போது, முதலீட்டாளர்கள் வெள்ளி மற்றும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதும் வேளையில் இரண்டும் கண்மூடித்தனமாக விலை உயர்ந்து வருகிறது.
இதனாள் தங்கத்தை போலவே வெள்ளியின் விலை உயர்வு அதை ஒரு லாபகரமான முதலீட்டு வாய்ப்பாக மாற்றியுள்ளது. சிறு முதலீட்டளார்கள், சாமானிய மக்கள் வெள்ளி நாணயங்கள் அல்லது கட்டிகளாக வாங்கலாம். தற்போது ஈகாமர்ஸ் தளத்தின் வாயிலாக கூட தங்கத்தை வாங்க முடியும். வெள்ளி அதிகமாக கட்டிகளாக வாங்குவது பாதுகாப்பு இல்லை நீங்கள் நினைத்தால் வெள்ளி ETF-களை SIP முறையில் வாங்குவது நீண்டகால முதலீட்டுக்கு உதவும்.
RBI-யின் இந்த புதிய வழிகாட்டுதல்கள், வெள்ளியை தங்கத்திற்கு மாற்றாக நிதி சந்தையில் முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது மக்களுக்கு கூடுதல் நிதி வாய்ப்புகளை வழங்கினாலும், வெள்ளி கடன்களுக்கான விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
வெள்ளி மீது கடன் அளிப்பது மக்களுக்கு உதவுமா..? உங்க பதிலை கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ரூ.4கோடி கார்பஸ்! உங்கள் ரிட்டையர்மென்ட்டை ராஜவாழ்க்கையாக்குவது எப்படி? கோடீஸ்வர கனவு நனவாகுமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?



Click it and Unblock the Notifications