வெள்ளி விலை அடுத்த 12 மாதத்தில் கிலோ ரூ.85,000 ஆகுமாம்,
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வெள்ளிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சந்தை நிலவரம் தெரிவிக்கிறது. இதனால் வெள்ளியின் விலை வேகம் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் அடுத்த சில காலாண்டுகளில் மேலும் 15 சதவீதத்திற்கும் அதிகமாக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு சேர்க்கலாம் என்று மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் அறிக்கை கூறுகிறது.

2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கணிசமான லாபங்களைச் சந்தித்த பிறகு, வெள்ளி அதிக விலை மட்டங்களில் சில ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது. ஒவ்வொரு பெரிய சரிவுக்குப் பிறகும், உள்நாட்டில் வெள்ளி விலைகள் அதிக அளவில் மாறுவதைக் கண்டு வருகின்றன, மேலும் இந்த போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MOFSL ஆனது ரூ. 70,500 உடனடி ஆதரவுடன் கீழ் மட்டங்களில் தொடர்ச்சியான திரட்சியை அறிவுறுத்துகிறது. அதே நேரத்தில் வலுவான நடுத்தர கால ஆதரவு ரூ.68,000 ஆகும். அடுத்த 12 மாதங்களில் MOFSL விலை ரூ.82,000ஐத் தொடர்ந்து ரூ.85,000 ஆக இருக்கும்.
வெள்ளியின் விலை இப்படித் தொடர்ந்து அதிகரித்தால் அதனால் தங்கத்தின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர். இது வாடிக்கையாளர்களை மிகவும் பாதிக்கும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக வெள்ளியின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. இதற்குக் காரணம் வெள்ளித் தட்டுப்பாடு ஆகும். இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. 2023 ஆம் நிதியாண்டின் முதல் 4 மாதத்தில் 11 சதவீதம் உயர்ந்த வெற்றி விலை, தற்போது 6 சதவீத லாபத்தை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.
வெள்ளி விலை 2023 ஆம் நிதியாண்டின் ஆரம்பக்கட்டத்தில் துவங்க மிக முக்கியமான காரணம் அமெரிக்க வங்கி மற்றும் கடன் நெருக்கடியில் ஏற்பட்ட தாக்கம் தான். ஆனால் பொருளாதாரத்தின் நிலை சரியான உடனேயே வெள்ளி விலையும் சரிந்துள்ளது. இதற்கு அமெரிக்க மத்திய வங்கியின் மந்தமாக கொள்கை முடிவுகளும் முக்கிய காரணமாகும்.


Click it and Unblock the Notifications