வருமானம் கொடுப்பதில் தங்கத்தை டஃப் கொடுக்கும் வெள்ளி..! ஆனால் அதுக்கு மரியாதை இவ்வளவுதாங்க..!!

தங்கமும், வெள்ளியும் விலை மதிப்பற்ற உலோகங்கள்தான். ஆனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிட சொத்தாக தங்கத்தை பார்க்கின்றனர். சந்தை வீழ்ச்சியில் இருக்கும்போது, மூலதனத்தை பாதுகாக்கும் திறனுக்காக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கு மதிப்பு அளிக்கிறார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, தங்கம் மற்றும் அமெரிக்க கருவூல பத்திரங்கள்.

அமெரிக்க கருவூல பத்திரங்கள்
தங்கம் பல நூற்றாண்டுகள் பழமையான நெருக்கடி ஹெட்ஜ் ஆகும். கருவூல பத்திரங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் முழு நம்பிக்கையால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் நம்பகமான வருமானத்தை வழங்குகிறது. வெள்ளியின் நல்ல வருமானம் அளிக்கிறதுதான் ஆனாலும் முதலீட்டாளர்கள் பார்வையில் அது பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுவதில்லை. அதற்கு முக்கிய காரணம், வெள்ளி ஒரு விலைமதிப்பற்ற உலோகமாகவும், தொழில்துறை பொருளாகவும் இரட்டை வேடத்தில் செயல்படுகிறது. இது அதன் பாதுகாப்பான புகலிட நிலையை சிக்கலாக்குகிறது.

வருமானம் கொடுப்பதில் தங்கத்தை டஃப் கொடுக்கும் வெள்ளி..!  ஆனால் அதுக்கு மரியாதை இவ்வளவுதாங்க..!!

1991 முதல் 2025 வரையிலான 34 ஆண்டு காலத்தில் வெள்ளியின் விலை (1 அவுன்ஸ்) 4 டாலருக்கும் குறைவாக இருந்து 32 டாலராக உயர்ந்துள்ளது. இது 733 சதவீத மொத்த லாபத்துக்கு சமம். அதேசமயம் 1991 முதல் 2024 டிசம்பர் வரையிலான காலத்தில் தங்கத்தின் விலை ( 1 அவுன்ஸ்) 353 டாலரிலிருந்து 2,624 டாலராக அதிகரித்துள்ளது. இது 643 சதவீத லாபமாகும்.

பணவீக்கம்
தங்கத்தை காட்டிலும் வெள்ளி நல்ல வருமானத்தை கொடுத்துள்ளபோதிலும், பணவீக்கம் லாபத்தின் கணிசமான பகுதியை குறைத்துவிட்டது. 1970 முதல் வெள்ளி விலை ஆண்டுக்கு 5.3 சதவீத வளர்ச்சி கண்டது. ஆனால் பணவீக்கத்துக்கு பிறகு விலை வளர்ச்சி 3.15 சதவீதம் மட்டுமே என்று ஒரு மதிப்பீடு கண்டறிந்துள்ளது. தங்கத்தின் நீண்ட கால உண்மையான வருமானமும் இதேபோல் மிக குறைவு. அதேசமயம், 1926 முதல் அமெரிக்க கருவூல பத்திரங்கள் வாயிலான வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 சதவீதம் வரை உள்ளன.

பாதுகாப்பான புகலிட முதலீடு என்பதில் ரிஸ்க் என்பது முக்கியமான விஷயமாகும். அதாவது விலை ஏற்ற இறக்கம் ஒரளவு நிலையானதாக இருக்க வேண்டும். ஆனால் வெள்ளி மிகவும் நிலையற்றது. வெள்ளியின் ஆண்டு விலை ஏற்ற இறக்கம் சராசரியாக 20 சதவீதம் அல்லது அதற்கு மேல் உள்ளது. இது தங்கத்தின் வழக்கமான ஏற்ற இறக்கத்தை விட இரு மடங்கு அதிகமாகும். தங்கத்தின் விலை நகர்வுகள் ஆண்டுக்கு 10-15 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

2008 நிதி நெருக்கடி
உதாரணமாக, 2008 நிதி நெருக்கடியின் போது, தொழில்துறை தேவை குறைந்ததால் அந்த ஆண்டில் வெள்ளியின் விலை 27 சதவீதம் குறைந்தது. ஆனால் தங்கத்தின் விலை 3 சதவீதம் உயர்ந்தது. இதேகாலத்தில் 10 ஆண்டு கால அமெரிக்க கருவூல பத்திரங்கள் 20 சதவீதம் வருமானம் கொடுத்தன.

பங்குகளுடான தங்கத்தின் தொடர்பு ஜீரோ அல்லது எதிர்மறையாக உள்ளது. அதாவது பங்குகள் சரியும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. இது ஒரு விரும்பத்தக்க பாதுகாப்பான புகலிடப் பண்பாகும். அதேசமயம் பங்குச் சந்தையுடன் வெள்ளியின் தலைகீழ் தொடர்பு பலவீனமாக உள்ளது. வெள்ளி அவசியம் ஒரு பங்கு எதிர்ப்பு சொத்து அல்ல. ஏனெனில் பங்குச் சந்தை வீழ்ச்சி காணும் வெள்ளியின் விலையும் வீழ்ச்சி காணும். ஏனென்றால் வெள்ளியின் விலை ஒரளவு பொருளாதார நடவடிக்கைகளால் இயக்கப்படுகிறது.

கோவிட்
உதாரணமாக 2020 கோவிட் காரணமாக பங்குச் சந்தைகளின் திடீர் சரிவின்போது, வெள்ளி ஆரம்பத்தில் பங்குகளுடன் சரிந்தது. 1991, 2020 மற்றும் 2025ம் ஆண்டுகளில் தங்கம் டூ வெள்ளி விகிதம் (ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க எவ்வளவு அவுன்ஸ் வெள்ளி தேவைப்படும் என்பதை கணக்கிடும் அளவீடு). 1991, 2020 மற்றும் 2025ம் ஆண்டுகளில் 100:1க்கு மேல் உயர்ந்தது. இது தீவிரமான மன அழுத்த காலங்களில், முதலீட்டாளர்கள் வெள்ளியை விட தங்கத்திற்கு அதிகமாக திரும்புவதை குறிக்கிறது. கடுமையான நெருக்கடியான காலக்கட்டங்களின் போது வெள்ளி பெரும்பாலும் பாதுகாப்பான புகலிடமாக என்பதில் பின்தங்குகிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

என்னதான் வெள்ளி நிலையற்றதன்மையாக இருந்தபோதிலும், சில நிபந்தனைகளின் கீழ் வெள்ளி பாதுகாப்பான புகலிட நடத்தையின் ஒரு பிரகாசத்தை காட்டியுள்ளது. புவிசார் அரசியல் பதற்றம் அல்லத தேக்கநிலை அச்ச காலங்களில், இரண்டு விலைமதிப்பற்ற உலோகங்களும் தற்காப்பு வரவுகளை ஈர்க்கக்கூடும். உதாரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு காலாண்டில் வெள்ளி 18.5 சதவீதம் உயர்நதது, தங்கம் 18.2 சதவீதம் வளர்ச்சி கண்டது. ஏனெனில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதால், முதலீட்டுக்கு பாதுகாப்பான புகலிடங்களாக அவற்றின் (தங்கம், வெள்ளி) கவர்ச்சி அதிகரித்தது.

புவிசார் அரசியல் நெருக்கடிகள்
1979 முதல் 2024 வரையிலான முக்கிய புவிசார் அரசியல் நெருக்கடிகள் குறித்த ஆய்வில், வெள்ளி பெரும்பாலும் வலுவான பாதுகாப்பான புகலிட தேவையை அனுபவித்து வருவதாகவும், சில சமயங்களில் தங்கத்தை விட வேகமாக உயர்ந்ததும் தெரியவந்தது. குறிப்பாக 2000களின் பிற்பகுதியில், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் அதைதொடர்ந்து ஐரோப்பிய கடன் கொந்தளிப்பு ஆகியவற்றின் போது, வெள்ளியின் விலை உயர்ந்தது.

2008 முதல் 2011ம் ஆண்டு வரை வெள்ளியின் விலை 495 சதவீதம் உயர்ந்தது. இதேகாலத்தில் தங்கத்தின் விலை 238 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டது. வெள்ளியின் விலை பல தசாப்தங்களாக உண்மையான அடிப்படையில் உயர்ந்துள்ளது ஆனால் படிப்படியாக. பொருளாதார மீட்சியின் எழுச்சியோ அல்லது பணவீக்க எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது தங்கத்தை விட வெள்ளி சிறப்பாக செயல்படுகிறது.

ரிஸ்க்
அதேசமயம், வெள்ளியின் அதிக ரிஸ்க் மற்றும் தொழில்துறை தொடர்பு என்பது நெருக்கடிகளின் தொடக்கத்தில், ஒரு பாதுகாப்பான புகலிடம் மிகவும் தேவைப்படும்போது அதன் மதிப்பை தக்கவைக்க தவறிவிடுகிறது. வெள்ளி பொதுவாக ஒரு பாதுகாப்பான சொத்தாக கருதப்படுவதில்லை. இருப்பினும் அது சரியான சூழ்நிலைகளில் ஒரு பணச் சொத்தாக செயல்பட முடியும். ஆனால் தங்கம் அல்லது கருவூல பத்திரங்களை போலவே வெள்ளி தொடர்ந்து நம்பகமான பாதுகாப்பான புகலிடமாக இல்லை என்று ஒரு பகுப்பாய்வு கூறுகிறது.

எனவே முதலீட்டாளர்கள் தங்களது ஒரு பரந்த போர்ட்ஃபோலியாவின் ஒரு பகுதியாக, ஒரு மிதமான வெள்ளி ஒதுக்கீடு பல்வகைப்படுத்தலை மேம்படுத்தலாம. இது சில கொந்தளிப்புகளின் போது (குறிப்பாக பணவீக்கம் மற்றும் பணவியல் பதில் முக்கிய கவலைகளாக இருக்கும்போது) நன்மைகளை வழங்கலாம். உலகளவில் விவேகமுள்ள முதலீட்டாளர்கள் வெள்ளியை முக்கிய பாதுகாப்பான புகலிடங்களுக்கு நிரப்பியாக கருதுகின்றனர். வருவாய் மற்றும் பணவீக்க ஹெட்ஜுக்கான சாத்தியமான ஆதாரம். ஆனால் சந்தைகள் புயலாக மாறும்போது முதல் பாதுகாப்பு வரிசையாக அல்ல.

செபி-க்கு பறந்த லெட்டர்.. என்எஸ்இ காலாவதி தினத்தில் முக்கியமான மாற்றம்..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+