தங்கம் விலை உயர்வுக்குப் பின்பு வெள்ளி முக்கிய முதலீட்டு உலோகமாக மாறினாலும், மக்கள் மத்தியில் வெள்ளி மீது முதலீடு செய்வதில் தயக்கம் அதிகமாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெள்ளி விலை என்பது நாணய கொள்கை முடிவுகளுடன் தொடர்புடையதாக இல்லாமல் தொழிற்துறை பயன்பாட்டின் வாயிலாக அதிகம் தடுமாற்றம் அடையக்கூடியதாக உள்ளது.
ஆயினும் வெள்ளியை தற்போது இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் சிறிய அளவில் நீண்ட கால அடிப்படையில் வாங்கத் துவங்கியிருக்கும் டிரெண்ட் அதிகரித்துள்ளது.

இதேபோல் எப்போதும் இல்லாமல் வெள்ளி நகைகளுக்கான டிமாண்ட் இந்தியாவில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது (தங்கம் விலை உயர்வால்).
இந்த நிலையில் அடுத்த வருடத் தீபாவளி, தந்தேரஸ் பண்டிகைக்குள் தங்கம் விலை 20 -30 சதவீதமும், வெள்ளி விலை குறைந்தபட்சம் 40 சதவீதம் வரையில் உயரும் என கமாடிட்டி பிரிவு வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஆக்மான்ட் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சி தலைவரான ரெனிஷா சைனானி, தற்போது எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை 1.88 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமாகும் நிலையில் அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 40 சதவீதம் வரையில் உயர்ந்து 2.65 லட்சம் ரூபாய் வரையில் உயரக்கூடும் என கணித்துள்ளார்.
இதேபோல் வெள்ளி விலை தற்போது எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.41 ரூபாய்க்கு வர்த்தகமாகும் நிலையில் அடுத்த வருடம் தீபாவளி பண்டிகைக்குள் 1.75 லட்சம் வரையில் 20 சதவீதம் வரையிலான உயர்வைப் பதிவு செய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
மியூச்சுவல் பண்ட்-ல் கிடைக்கும் 12-15 சதவீதம் வரையிலான லாபத்தை ஒப்பிடுகையில் தங்கம், வெள்ளி மீதான முதலீட்டுக்கு 20 -40 சதவீதம் வரையில் லாபம் கிடைப்பதாகக் கணிக்கப்பட்டு உள்ளது, முதலீட்டாளர்கள் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
அமெரிக்காவில் அடுத்த 2 வருடத்திற்கு ஜனநாயக கட்சியின் ஆதிக்கம் மாறாது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பெடரல் ரிசர்வ் வங்கி இறங்கும் காரணத்தால் வட்டி விகிதம் வேகமாக உயர வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டுச் சந்தையில் மீண்டுமொரு பெரிய மாற்றம் வரும் என கணிக்கப்படுவதால் தங்கம், வெள்ளி மீது கணிசமான முதலீடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக முதலீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஆனால் அடுத்த 6 - 12 மாதங்கள் தங்கம், வெள்ளி மிகவும் தடுமாற்றம் நிறைந்த காலகட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் மிகுந்த எச்சரிக்கை உடன் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

